[உபுண்டு தமிழகம்]கட்டற்ற மென்பொருள் மாநாடு - பிப்ரவரி 01,02,03 - 2008

arul kumar arulbharath.india at gmail.com
Sun Dec 30 03:49:14 GMT 2007


ennai mannithu vidungal....naan neengal sonnadhupol tamil payirchi
eddukkavillai....aanaal linux mattum padithu kondirukiraen.... viraivil
adhai padithu viduvaen....



On 12/19/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:
>
> கட்டற்ற மென்பொருள் மாநாட்டிற்கு பதிவு செய்வதற்கானத் தளம்
> http://registration.fossconf.in/web/. தற்சமயம் உருவாக்கத்தில் இருக்கும்
> கட்டற்ற மென்பொருளாகும் இத்தளம். இது பிஎஸ்டி உரிமத்தின் கீழ் விநியோகிக்கப்
> படுகின்றது. இதற்குரிய நிரல் http://registration.fossconf.in/code/முகவரியில் கிடைக்கப் பெறுகின்றது. பிழைகளையும் வழுக்களையும் கண்டெடுத்தால்
> அதனைத் தாக்கல் செய்யவும். வழுவிற்கான தீர்வுடன் அது இருப்பது சாலச்சிறந்தது.
> இம் மென்பொருளிடமிருந்து எதிர்பார்க்கக் கூடிய வசதிகள் குறித்து உறுதியாகத்
> தெரியாதக் காரணத்தினால் மாநாட்டிற்கு இணையாக இதனையும் உருவாக்கி வருகின்றோம்.
>
> முதற்கண் தாங்கள் பிரதிநிதியாகப் பதிவு செய்து தங்களைப் பற்றிய விவரங்களைத்
> தர வேண்டும். தளத்தினுள் நுழைந்ததும் தங்கள் பயனர் பெயரின் மீது சொடுக்குவதன்
> மூலம் தங்களைப் பற்றிய விவரங்களை பூர்த்தி செய்யலாம். பிரதிநிதியாகப் பதிவு
> செய்யாது சொற்பொழிவொன்றினை பதிவு செய்ய இயலாது.
> தங்களைப் பற்றிய சுய விவரங்களைத் தராது இத்தளத்தினுள் எதுவும் செய்ய இயலாது.
>
> எட்டு வகையானச் சொற்பொழிவுகள் பதிவு செய்யப்படலாம்.
>
>    - 45 நிமிடச் சொற்பொழிவு. விகிபீடியா சொற்பொழிவுகளைத் தவிர்க்கவும்.
>    அதாவது இணையத் தளங்களிலிருந்தும் விகிபீடியாவிலிருந்தும் பெறப் பட்ட தகவலின்
>    அடிப்படையில் தயார் செய்யப்பட்ட உரைகளை ஒத்தது. தாங்கள் செய்தவற்றைப் பற்றிப்
>    பேசவும். உதாரணத்திற்கு துருபல் பற்றி உரை நிகழ்த்தாது அதனைக் கொண்டு தரவு
>    நிர்வாக அமைப்பொன்றினை தாங்கள் வடித்திருந்தால் அதனைப் பற்றியும் அங்ஙனம் செய்த
>    போது சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் பேசவும்.
>    - கேள்வி பதிலோடுக் கூடிய பத்து நிமிடச் சொற்பொழிவு. முதன் முறையாக
>    உரையாற்ற விழைவோருக்கு உகந்த ஒன்று. அத்தகையோருக்கு பத்து நிமிடம் என்பது மிகப்
>    பெரிய விஷயம். கட்டற்ற மென்பொருளோடு தொடர்புள்ள எதைப் பற்றியும் உரையாற்றலாம்.
>    - மரத்தடி சொற்பொழிவு - அதாவது மரத்தடியின் கீழ் ஆற்றப்படும் உரை.
>    கரும்பலகையொன்று தங்களுக்குத் தரப்பட்டுவிடும். தாங்கள் விரும்பும் வரை
>    பேசிக்கொண்டிருக்கலாம். ஆற்றல் மிக்கோருக்கே இது பரிந்துரைக்கப் படுகிறது.
>    - பயிற்று வகுப்பு - இரண்டு மணி நேரம் வரை. மறுபடியும்
>    ஆற்றலுடையோருக்கானது.
>    - தடாலடி - இது பற்றி விளக்கமாக
>    http://registration.fossconf.in/code/wiki/ConferenceSprintsபக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.
>    - மாணவர் திட்டம் - மாணவராக இருந்து கட்டற்ற மென்பொருள் திட்டமொன்றினை
>    செய்து வருவீர்களானால் இது தங்களுக்கு உகந்த இடம்.
>    - பண்பாட்டு நிகழ்வு - பண்பாடு சார் நிகழ்வுகளுக்கு
>    - முறையான கல்விசார் அளிக்கைகள்
>
> குறிப்பு:
>
>    - தங்களது அளிக்கைகளை எவ்வளவு விரைவாகப் பதிவேற்ற முடியுமோ அவ்வளவு
>    விரைவாக பதிவேற்றவும். அவற்றை நிறைவு செய்யக் காத்திருக்க வேண்டாம். சரவைப்
>    பிரதிகளாக அளிக்கைகளை பதிவேற்றினால் ஆற்றல் மிக்கோர் அதனைப் பார்வையிட்டு
>    செம்மைப் படுத்த உதவலாம்.
>    - சொற்பொழிவிற்குப் பலரையும் தாங்கள் சேர்த்துக் கொள்ள இயலும்.
>    இவற்றுள் யார் வேண்டுமானாலும் சொற்பொழிவின் விவரத்தினைத் தொகுக்க இயலும்.
>    - சொற்பொழிவாளர் ஒருவர் தன்னைத் தானே இணைத்துக் கொள்ள இயலாது.
>    இன்னொருவர் தான் செய்ய வேண்டும்.
>    - சொற்பொழிவாளரொருவர் தம்மைத் தானே விளக்கிக் கொள்ளவும் இயலாது.
>    இன்னொருவர் தான் செய்ய வேண்டும்.
>    - *சொற்பொழிவுகள் எம்மொழியிலும் அமையலாம். தமிழில் சொற்பொழிவு நிகழ்த்த
>    விரும்பினால் தலைப்பினையும் விவரத்தினையும் தமிழில் தரவும்.*
>    - இத்தளம் பன்மொழித் தனமை வாய்ந்தது. தங்கள் உலாவியில் அமையப் பெற்ற
>    மொழியினை பிரதிபலிக்கும். அங்ஙனம் இல்லாது போனால் சரங்கள் இன்னும்
>    மொழிபெயர்க்கப் படவில்லையெனப் பொருள். தாங்களும் மொழிபெயர்த்து உதவலாம்.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
>
>
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20071230/3259b1ba/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list