[உபுண்டு தமிழகம்]கட்டற்ற மென்பொருள் மாநாடு - பிப்ரவரி 01,02,03 - 2008

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Wed Dec 19 11:28:10 GMT 2007


கட்டற்ற மென்பொருள் மாநாட்டிற்கு பதிவு செய்வதற்கானத் தளம்
http://registration.fossconf.in/web/. தற்சமயம் உருவாக்கத்தில் இருக்கும்
கட்டற்ற மென்பொருளாகும் இத்தளம். இது பிஎஸ்டி உரிமத்தின் கீழ் விநியோகிக்கப்
படுகின்றது. இதற்குரிய நிரல் http://registration.fossconf.in/code/ முகவரியில்
கிடைக்கப் பெறுகின்றது. பிழைகளையும் வழுக்களையும் கண்டெடுத்தால் அதனைத் தாக்கல்
செய்யவும். வழுவிற்கான தீர்வுடன் அது இருப்பது சாலச்சிறந்தது. இம்
மென்பொருளிடமிருந்து எதிர்பார்க்கக் கூடிய வசதிகள் குறித்து உறுதியாகத்
தெரியாதக் காரணத்தினால் மாநாட்டிற்கு இணையாக இதனையும் உருவாக்கி வருகின்றோம்.

முதற்கண் தாங்கள் பிரதிநிதியாகப் பதிவு செய்து தங்களைப் பற்றிய விவரங்களைத் தர
வேண்டும். தளத்தினுள் நுழைந்ததும் தங்கள் பயனர் பெயரின் மீது சொடுக்குவதன்
மூலம் தங்களைப் பற்றிய விவரங்களை பூர்த்தி செய்யலாம். பிரதிநிதியாகப் பதிவு
செய்யாது சொற்பொழிவொன்றினை பதிவு செய்ய இயலாது.
 தங்களைப் பற்றிய சுய விவரங்களைத் தராது இத்தளத்தினுள் எதுவும் செய்ய இயலாது.

எட்டு வகையானச் சொற்பொழிவுகள் பதிவு செய்யப்படலாம்.

   - 45 நிமிடச் சொற்பொழிவு. விகிபீடியா சொற்பொழிவுகளைத் தவிர்க்கவும்.
   அதாவது இணையத் தளங்களிலிருந்தும் விகிபீடியாவிலிருந்தும் பெறப் பட்ட தகவலின்
   அடிப்படையில் தயார் செய்யப்பட்ட உரைகளை ஒத்தது. தாங்கள் செய்தவற்றைப் பற்றிப்
   பேசவும். உதாரணத்திற்கு துருபல் பற்றி உரை நிகழ்த்தாது அதனைக் கொண்டு தரவு
   நிர்வாக அமைப்பொன்றினை தாங்கள் வடித்திருந்தால் அதனைப் பற்றியும் அங்ஙனம் செய்த
   போது சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் பேசவும்.
   - கேள்வி பதிலோடுக் கூடிய பத்து நிமிடச் சொற்பொழிவு. முதன் முறையாக
   உரையாற்ற விழைவோருக்கு உகந்த ஒன்று. அத்தகையோருக்கு பத்து நிமிடம் என்பது மிகப்
   பெரிய விஷயம். கட்டற்ற மென்பொருளோடு தொடர்புள்ள எதைப் பற்றியும் உரையாற்றலாம்.
   - மரத்தடி சொற்பொழிவு - அதாவது மரத்தடியின் கீழ் ஆற்றப்படும் உரை.
   கரும்பலகையொன்று தங்களுக்குத் தரப்பட்டுவிடும். தாங்கள் விரும்பும் வரை
   பேசிக்கொண்டிருக்கலாம். ஆற்றல் மிக்கோருக்கே இது பரிந்துரைக்கப் படுகிறது.
   - பயிற்று வகுப்பு - இரண்டு மணி நேரம் வரை. மறுபடியும்
   ஆற்றலுடையோருக்கானது.
   - தடாலடி - இது பற்றி விளக்கமாக
   http://registration.fossconf.in/code/wiki/ConferenceSprints பக்கத்தில்
   கொடுக்கப் பட்டுள்ளது.
   - மாணவர் திட்டம் - மாணவராக இருந்து கட்டற்ற மென்பொருள் திட்டமொன்றினை
   செய்து வருவீர்களானால் இது தங்களுக்கு உகந்த இடம்.
   - பண்பாட்டு நிகழ்வு - பண்பாடு சார் நிகழ்வுகளுக்கு
   - முறையான கல்விசார் அளிக்கைகள்

குறிப்பு:

   - தங்களது அளிக்கைகளை எவ்வளவு விரைவாகப் பதிவேற்ற முடியுமோ அவ்வளவு
   விரைவாக பதிவேற்றவும். அவற்றை நிறைவு செய்யக் காத்திருக்க வேண்டாம். சரவைப்
   பிரதிகளாக அளிக்கைகளை பதிவேற்றினால் ஆற்றல் மிக்கோர் அதனைப் பார்வையிட்டு
   செம்மைப் படுத்த உதவலாம்.
   - சொற்பொழிவிற்குப் பலரையும் தாங்கள் சேர்த்துக் கொள்ள இயலும். இவற்றுள்
   யார் வேண்டுமானாலும் சொற்பொழிவின் விவரத்தினைத் தொகுக்க இயலும்.
   - சொற்பொழிவாளர் ஒருவர் தன்னைத் தானே இணைத்துக் கொள்ள இயலாது. இன்னொருவர்
   தான் செய்ய வேண்டும்.
   - சொற்பொழிவாளரொருவர் தம்மைத் தானே விளக்கிக் கொள்ளவும் இயலாது.
   இன்னொருவர் தான் செய்ய வேண்டும்.
   - *சொற்பொழிவுகள் எம்மொழியிலும் அமையலாம். தமிழில் சொற்பொழிவு நிகழ்த்த
   விரும்பினால் தலைப்பினையும் விவரத்தினையும் தமிழில் தரவும்.*
   - இத்தளம் பன்மொழித் தனமை வாய்ந்தது. தங்கள் உலாவியில் அமையப் பெற்ற
   மொழியினை பிரதிபலிக்கும். அங்ஙனம் இல்லாது போனால் சரங்கள் இன்னும்
   மொழிபெயர்க்கப் படவில்லையெனப் பொருள். தாங்களும் மொழிபெயர்த்து உதவலாம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!



-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20071219/4bb3d6ad/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list