[உபுண்டு தமிழகம்]கட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Aug 3 09:55:10 BST 2007


வணக்கம்,

கட்டற்ற மென்பொருள்,  அதன் பயன்பாடுகள் மற்றும் அவசியம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தேசம் கொண்டுள்ளோம்.

தாங்கள் சார்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் அமைப்புகளில் இது குறித்து
கருத்தரங்களுக்கு ஏற்பாடு செய்து ஒத்துழைப்பு நல்கலாம்.

சென்னை  எம்.ஐ.டி வளாகத்தில் இயங்கிவரும் NRCFOSS (nrcfoss.org.in,
nrcfosshelpline.in)  மூலம் இக்கருத்தரங்குகள் ஒருங்கிணைக்கப் படும்.

தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கருக்கு பயிற்சிகள் முதலியன
மேற்கொள்ளலாம்.

தமிழ்ச் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடனும் உறவாடி அவ்விடத்தும்
கருத்தரங்குகள் நடத்தலாம்.

குனு/  லினக்ஸ் நிறுவுவது எப்படி?  அதில் தமிழ் வசதிகள் செய்து கொள்வது
எப்படி?  மேற்கொண்டு நமது மென்பொருட் சார் தேவைகள் என்ன முதலியவற்றை
உள்ளடக்கி இக் கருத்தரங்குகள் அமையலாம்.

இது குறித்து தாங்கள் சார்ந்துள்ள  நிறுவனங்களில் ஏற்பாடு செய்ய
விழையுங்கால் எமது மின்னஞ்சல்  முகவரிக்கு மடலிடவும்.

தங்களின் ஒத்துழைப்பினை  நாடுகிறோம். தங்கள் கருத்துக்களை  அறியத்
தரவும்.

நன்றி.

அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
கூடித் தொழில் செய்!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070803/18a31ed9/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list