[உபுண்டு தமிழகம்]இன்றைய வாராந்திர ஐ.ஆர்.சி சந்திப்பின் சாராம்சம்

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Apr 22 17:23:26 BST 2007


வணக்கம்,

இன்றைய உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐ.ஆர்.சி சந்திப்பின் சாராம்சம்...

  - இன்று நடைபெற்ற ஐ.ஆர்.சி உரையாடலில் பஃங்கி பைஃஸ்டி போட்டி குறித்து
  அலசப் பட்டது. பைஃஸ்டி சென்னையிலிருந்து மே முதல் அல்லது இரண்டாவது வாரம்
  வெளியிடப் படும். இது விஷயமாக உபுண்டு இந்திய குழுவுடன் கலந்தலோசிக்கப்
  பட்டது. பார்க்க: https://wiki.ubuntu.com/TheFunkyFeistyCompetition
  - டெரைவேடிவ் திட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதால் அது குறித்து
  உபுண்டு கம்யூனிடி கௌன்சிலுக்கு அறியப் படுத்தியுள்ளோம்.
  - கே பணிச்சூழலின் தமிழாக்கக் கையேடு, gettext குறித்த உதவி ஆவணம்
  மற்றும் கேபாபல் உதவிக் கையேடு உருவாக்குவது குறித்து விவாதிக்கப் பட்டது.
  இதற்கான விகி பக்கம் உருவாக்கப் படும். புதியதாக தமிழாக்கம் செய்ய
  விழைவோருக்கு இவை உதவிபுரியும். இவற்றை இயற்ற தன்னார்வலர்கள் தேவை.
  - தினசரி இந்திய நேரம் இரவு பத்து மணிக்கு #ubuntu-tam வாயிலுக்கு வர
  முயற்சிப்பது என்றும் அது சமயம் வரக்கூடிய பிறருடன் கலந்துரையாடலாம் என்றும்
  யோசனைத் தெரிவிக்கப் பட்டது.
  - உரையாடல்
  http://logs.ubuntu-eu.org/freenode/2007/04/22/%23ubuntu-tam.htmlபக்கத்தில்
பதிவு செய்யப் பட்டுள்ளது.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070422/9bb72e77/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list