[உபுண்டு_தமிழ்]kanini - ubuntu ( கணினி உபுண்டு பற்றி)
ஆமாச்ச
ஆமாச்ச
Wed Jan 6 14:06:20 GMT 2010
On Sat, 2009-12-12 at 06:56 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
>
> இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக
> அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது.
>
ஆம். அங்கே அதிக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் காலம் விரைவில்
மலரும் என எதிர்பார்ப்போம்.
> எனது கருத்தேற்றங்கள் :
>
> i) ubuntu-tam - தொழில்னுட்ப உரையாடல்கள் மற்றும் பயனர்கள்
> வினா-மறுமொழிகள் ஆகியனவற்றிற்கு
>
> ii) ubuntu-l10n-tam - அதன் தலைப்பில் உள்ளவாறு தமிழாக்கம் தொடர்பான
> உரையாடல்களுக்கு
>
இவ்வகையிலேயே தற்போதும் அமைந்துள்ளது. மேலும் நாம் மேற்கொள்ள முனைந்துள்ள
திட்டங்களுக்கு லாஞ்சுபேடில் இருக்கும் திட்டங்களிலேயே மடலாடற் குழுக்களும்
இடம்பெற்றுவிடுகின்றன.
> iii) மேலும் பொதுவான அறிவிப்புகளுக்கு என தனி
> குழுமம் lists.ubuntu.com இல் அமைக்க இயலுமாயின் அறிவுப்புகளுக்கு அது.
> இயலாவிடில் தற்போது போல அறிவிப்புகளை மேல் இரண்டிலும் பதியாலம்.
தற்போதைக்கு மேற்கூறிய இரு மடலாடற் குழுக்களிலும் சேர்த்து பதிந்து
கொள்ளலாம். தொடர்ச்சியாக பொறுப்பாற்றக் கூடியோர் வருகிறபோதும் மடல்கள்
அதிகம் சேரத் தொடங்கும் கால கட்டங்களில் இதைப் பற்றிய முடிவு
மேற்கொள்ளலாம்.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list