[உபுண்டு_தமிழ்]கட்டற்ற (தமிழ்க்) கணிமை - முதல் கூடுதல்

malathi selvaraj malathiramya at gmail.com
Thu Feb 18 06:05:14 GMT 2010


வணக்கம்,

முன்னர் அறிவித்திருந்த படி கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான,
முதலாவது சந்திப்பு வரும் சனிக்கிழமையன்று (20/02/2010) நடைபெறும்.

இரண்டு தலைப்புக்களில் அளிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன,

1) மின்னெழுத்து உருவாக்கத்தில் எமது அனுபவங்கள் - சுஜி, NRCFOSS
2) ஹன்ஸ்பெல் எழுத்துப்பிழை திருத்தியிலிருந்து குனு/ லினக்ஸ்
இயங்குதளங்களுக்கான தமிழ் எழுத்துப் பிழை திருத்தி - மாலதி, NRCFOSS

கட்டற்ற மென்பொருள் தொடர்பான தலைப்புக்களில் தாங்கள் அறிந்த விஷயங்களை
எடுத்துரைக்கவும் தங்களது பங்களிப்புகளை எடுத்துச் சொல்லவும் இந்நிகழ்வுகளைத்
தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தாங்கள் ஏதேனும் பகிர்ந்து கொள்ள
விரும்பினால் தலைப்பைப் பற்றியும் தங்களைப் பற்றியும் சிறிய மடலொன்றை எமக்கு
தட்டெழுதவும்.

தேதி: 20/02/2010 - சனிக்கிழமை

நேரம்: மாலை மூன்று மணி

இடம்: NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னை -
600 044
-- 
Regards,
S.Malathi.

http://saranyaselvaraj.wordpress.com
http://innovativegals.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20100218/81e97441/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list