[உபுண்டு_தமிழ்]இணையக்கூட்டத்தில் இணையலாம்
கா. சேது | K. Sethu
skhome at gmail.com
Mon Mar 23 03:56:47 GMT 2009
2009/3/21 amachu <amachu at ubuntu.com>
> On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote
> > அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான
> > வழி எதுவும் தெளிவாக இல்லை.
>
>
> உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம்
> இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312
>
கெய்ம் (gaim) ஆனது பிட்ஜின் (pidgin) என பெயர் மாறியது 2007 இல்
எனத்தெரிகிறது. 7.10 (கட்சி) முதல் கனோமில் Applications --> Internet -->
Pidgin Internet Messenger என்றே இருப்பதால் தங்கள் மேற்குறிப்பிட்ட
கையேட்டிலும் அதற்கேற்பத் திருத்தங்கள் செய்யுங்கள். மேலதிகமாக மிகப் பழைய
வெளியீடுகள் பயன்படுத்துவோர்களுக்காக Pidgin க்குப்பதில் Gaim என இருப்பின்
அதையே சொடுக்கும்படி குறிப்பிடலாம்.
இந் நிரலுக்கான பயனரது விருப்பு அமைப்புக்களை வைத்திருக்கும் அடைவு முன்னர்
gaim க்கு ~/.gaim எனவிருந்தது தற்காலங்களில் pidgin க்கு அது ~/.purple
எனவுள்ளது. (~/.pidgin அல்ல)
~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090323/954d290a/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list