[உபுண்டு_தமிழ்]PageMaker doesn't support Tamil99

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Mon Jul 20 03:19:55 BST 2009


2009/7/19 M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>:
>
> நீங்கள் உங்கள் உபுண்டுவின் மொழியாக தமிழை தெரிவு செய்துகொண்டீர்களானால்
> இயல்பாகவே தமிழ்
> 99 விசைப்பலகை உள்ளீட்டு முறைகள் நிறுவப்பட்டுவிடும்.
>

//உபுண்டுவின் மொழியாக தமிழை தெரிவு செய்துகொண்டீர்களானால்//-- உபுண்டுவை
நிறுவுகையிலா அல்லது நிறுவிய பின் தளத்தின் மொழியிடச்சூழிலை ta_IN என
இயக்குகையிலா ??

எக் கணத்தில் தாங்கள் கூறியது போல   "இயல்பாகவே தமிழ் 99 விசைப்பலகை
உள்ளீட்டு முறைகள்" நிறுவப்படுகிறது ?

தமிழ் மொழி பயன்பாட்டுக்கான பொதிகளை கட்டளைவரிகள் வழியாகவோ, Synaptic
Package Manager வழியாகவோ Language Support வழியாகவோ நிறுவுகையில் தமிழ்
உள்ளீட்டு முறைமைகளுக்காக நிறுவப்படுவது scim-table தான். அதில் தமிழ்99
இல்லை.  (அதில் வருவன போனடிக், இன்ஸ்கிரிப்ட், ரெமிங்டன்)

தற்கால உபுண்டுகளில்  scim-m17n பொதியை கட்டளைவரிகள் வழியாகவோ அல்லது
Synaptic Package Manager இல் தெரிவு செய்து நிறுவுகையிலேயே அதனுடன்
நிறுவப்படும் m17n-contrib என்பதில் இருந்து தமிழ்99 (m17n வகை)
சேர்கப்படுகிறது. அது ஒருங்குறி குறியேற்றத்துக்கு. அதில் தமிழ்99க்கான
விதிமுறைகளில் (http://www.tamilvu.org/Tamilnet99/keystand.htm) 9,10,11
இன்னும் உள்ளடக்கட்டடவில்லை.

GTK சார்  செயலிகளிலும்  ஒபன் ஆபிசினுடனும் பயன் படுத்தக்கூடிய
tamil-gtk2im நிறுவினால் அதில்  ஒருங்குறி மற்றும் தகுதரம் (TSCII)
ஆகியனவற்றிற்கு தனித்தனியே தமிழ்99 உள்ளன. தகுதரத்திற்கான தமிழ்99
எவ்வளவு தூரம் விதிமுறைகளுக்கு கட்டுப்படுகிறது என்பதை ஆயந்ததில்லை.
ஆனால் ஒருங்குறிக்கானது பல வழுக்களை கொண்டுள்ளது.

எனவே m17n மற்றும் tamil-gtk2im க்கிடையே m17n தான் பரிந்துரைக்கப்பட வேண்டியது.

 m17n விசைமாற்றிகளை scim உடன் மட்டுமல்லாது மாற்றாக uim அல்லது ibus
உடன் இயக்கவும் இயலும்.

ராமகிருஷ்ணன் அவர்கள் மடல்களை வாசித்த பின் மேலும் எழுதுவேன்

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list