[உபுண்டு_தமிழ்]PageMaker doesn't support Tamil99

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Sun Jul 19 13:49:32 BST 2009


ராமகிருஷ்ணன்,

உபுண்டுவின் தற்போதைய பதிப்பொன்றை நீங்கள்
பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்களானால் நச்சுநிரல் (வைரஸ்) தாக்குதல் பற்றி
நீங்கள் எவ்விதத்திலும் பயங்கொள்ளத்தேவையில்லை.

லினக்சின் இதுவரைகால வரலாற்றிலேயே ஒன்றிரண்டு நச்சுநிரல்கள்தான் வந்து
தாக்கியுள்ளன. இன்றைய தேதிக்கு லினக்சுக்கான நச்சுநிரல் என்று நடப்பில் எதுவுமே
அறியப்படவில்லை.

லினக்ஸ் வழங்கி (sever) ஒன்றை வைத்து அதன் கீழ் ஏராளம் வின்டோஸ் clients
பயன்படுத்தும் நிறுவனமொன்றாக இருக்கும் நிலையில் நச்சுநிரல் தடுப்பு
மென்பொருட்களைப் பயன்படுத்தலாம் அல்லாவிட்டால் அது தேவையே இல்லை. லினக்சினூடாக
வின்டோசுக்கு நச்சுநிரல்கள் பரவாமல் தடுக்கவே இன்று அதிகம் வழங்கிகளில்
இவ்வாறான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உங்கள் இயங்குதளத்தின் (OS) இயக்கம் வழக்கத்துக்கு மாறாக இருக்கிறதென்றால்
அதற்கான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஓடிக்கொண்டிருக்கும் process களை கவனித்து
பிரச்சினையை கண்டுபிடியுங்கள்.

உலாவி வழமைக்கு மாறாக இயங்குகிறதென்றால் எப்படி? புரியவில்லை.

தரவிறக்குதல் என்றால் download.


நீங்கள் உங்கள் உபுண்டுவின் மொழியாக தமிழை தெரிவு செய்துகொண்டீர்களானால்
இயல்பாகவே தமிழ்
99 விசைப்பலகை உள்ளீட்டு முறைகள் நிறுவப்பட்டுவிடும்.

-மு. மயூரன்


mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com |
twitter.com/mmauran


2009/7/19 thiru ramakrishnan <thiru.ramakrishnan at gmail.com>

> உங்கள் விடைக்கு நன்றி!
>
>
> > ஒரு நிரல் யூனிகோடை அனுமதிக்கவில்லை எனில் அது
> > அதன் குறைபாட்டையே காட்டுகிறது!
> ஆம். பேஜ்மேக்கர் யூனிக்கோட்-ஐக் கையாளாது என்று நான்
> நினைத்துக்கூடப்பார்க்கவில்லை. திரு இரகுவீரதயாள் அவர்களுடைய
> விடையிலிருந்து இதை அறிந்தபோது வியப்படைந்தேன்.
>
>
> > தமிழ்  99 ஒரு உள்ளீட்டு முறைதானே?
> > அதிலேயே பயன்படுத்தலாம்.
> > இதனால் யூனிகோடை உள்ளிட முடியாது என்று இல்லை.
> நான் யூனிக்கோட்-ஐத் தான் பயன்படுத்துகிறேன். இதனால்தான்
> பேஜ்மேக்கர் பயன்படுத்துபவர்களால் என் கோப்புகளைப் படிக்க
> முடிவதில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.
>
>
> தமிழ்99ல் யூனிகோட் அல்லாதவற்றை (tscii, tab, tam
> முதலியவற்றை) பயன்படுத்த முடியுமா?
>
> அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?
>
>
> > அவரவர் பயன்பாட்டை பொருத்தது.
> எனக்கு வேகமான இணைப்பு கிடைப்பதில்லை. மேலும்,
> அதிக நேரமும் கிடைப்பதில்லை. அதனால் நான்
> இணையத்தில் அதிகம் உலாவுவதில்லை. ஒரு நாளைக்குச்
> சராசாரியாகச் சுமார் 20 நிமையங்கள் (பெரும்பாலும் இந்து
> முதலியவற்றைப் படிப்பதற்கு) தான் உலாவுகிறேன்.
> ஆனால், கிருமி வருவதற்கு அதிக நேரம் வேண்டியதில்லையே!
>
>
> > லீனக்ஸீல் வைரஸ் தாக்குதல் குறைவு.
> ஆம். ஆனால், கடந்த சில மாதங்களாக ஃபயர்ஃபாக்ஸ்
> பல நேரங்களில் (என்) கட்டுப்பாடின்றி உலவுவதுபோலத்
> தெரிகிறது. தொலைபேசி இணைப்பும் hard diskம் நிறைய
> வேலை செய்கின்றன, ஆனால் அந்த வேலை என்ன என்று
> தெரிவதில்லை! அதனால்தான் கிருமி குடிகொண்டுவிட்டதாக
> எனக்குச் சந்தேகம் வருகிறது.
>
>
> > தேவையானால் க்லாம்வைரஸ் மென்பொருளை
> > கூடுதலாக நிறுவிக்கொள்ளலாம்.
> தயவுசெய்து க்லாம்வைரஸ் என்பதன் ஆங்கிலப் பெயரை
> எழுதவும். நன்றி.
>
>
> > கடந்த 4 வருடங்களக உபுண்டுவையே பயன்படுத்துகிறேன்.
> நான் சுமார் 2 ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன். கடந்த 3-4
> மாதங்களாகத்தான் ஏதோ தவறு நடப்பதுபோல் தெரிகிறது.
>
>
> > தரவிறக்கி நிறுவுங்கள்.
> "தரவிறக்கி" என்றால் என்ன?
>
>
> >  தமிழ்99 சிம் இல் பொதுதான். (scim) கூடுதல் மொழி
> > நிறுவலில் தமிழை நிறுவினாலும் கூட போதும்.
> நான் சிறப்பாக ஒன்றுமே செய்யவில்லை. ஆனால், தமிழ்99
> தவிரப் பிற தமிழ் உள்ளீட்டு முறைகள் உள்ளன!
>
> ராம்கி  94425 60429
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090719/76a5735a/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list