[உபுண்டு_தமிழ்]தமிழ் மின்னெழுத்து முன்னேற்றங்கள்...
suji A
suji87.msc at gmail.com
Tue Jan 13 04:58:31 GMT 2009
வணக்கம்
நானும் மாலதியும் தமிழ் மின்னெழுத்து உள்ளிட்ட சிலத் திட்டங்களுக்கு பங்களித்து
வருகிறோம். உபுண்டுவில் இயல்பாக கிடைக்கப் பெறும் மதுரம், கல்யாணி, காதம்பரி
ஆகிய மின்னெழுத்துக்கள் வழு உடையதாகத் திகழ்கின்றன.
அதாவது தமிழ் எழுத்துக்கள் அவற்றிற்குரிய யுனிகோடு மதிப்புடன் பொருத்தப்படாமல்
ஆங்கில எழுத்துக்களுக்குரிய எண்களோடு பொருத்தப்பட்டுள்ளன. இதனை களைவதற்கான
முயற்சியில் தற்சமயம் ஈடுபட்டு வருகிறோம்.
பணியின் முதற் கட்டமாக மதுரம் மின்னெழுத்தை எடுத்து, அதில் தமிழ்
மின்னெழுத்துக்கு (font) உரிய எழுத்துருவின் (glyph) ஆங்கிலப் பொருத்தத்தை
நீக்கி அவ்வெழுத்தை அதற்குரிய யுனிகோடு மதிப்போடு பொருத்திவிட்டோம். தற்சமயம்
அதனை சோதித்து வருகிறோம். முழுமையாக சோதித்து விட்டு அனைவருடனும் பகிர்ந்து
கொள்கிறோம்.
மூன்று மின்னெழுத்துக்களிலும் உள்ள குறைகளை முறையாகக் களைந்த பின்னர் வழுத்
தாக்கல் செய்து டெபியன் மற்றும் உபுண்டுவின் அடுத்த வெளியீடுகளில் ஈடு செய்ய
உத்தேசித்துள்ளோம். பணியில் ஏற்படும் முன்னெற்றங்களை அவ்வப்போது பகிர்ந்து
கொள்கிறோம்.
இதுவரை மேற்கொண்ட பணிகளை விக்கியில் ஆவண படுத்தியுள்ளோம். விக்கி முகவரி:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=Work_done_in_clearing_Bugs_with_Unicode_Fonts_that_comes_default_with_Ubuntu
இது முடிந்ததும் சில புதிய மின்னெழுத்துக்கள் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான லாஞ்சுபேட் திட்ட முகவரி:
https://launchpad.net/~tamilfontsteam<https://launchpad.net/%7Etamilfontsteam>
--சுஜி
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090113/be91f3e3/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list