[உபுண்டு_தமிழ்]இந்திரிபிட் ஐபக்ஸ் - பீடா சோதனை

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Fri Oct 17 05:08:08 BST 2008


இணைய வசதி இருந்தால் தான் மொழிக்குத் தேவையான பொதிகள் நிறுவப்படுகின்றன.
இது பழைய சேதிதான். :-)

மேலும் காதம்பரி கல்யாணி போன்ற மின்னெழுத்துக்கள் முறையான தமிழ் யுனிகோடு
மின்னெழுத்துக்கள் அல்ல. இதுதான் பயர்பாக்சில் ஆங்கில எழுத்துக்கள் மீது
தமிழ் படர காரணமா என்று சோதித்து உறுதி செய்ய வேண்டும்.

இயல்பாக ஸ்கிம் (தமிழுக்குத் தேவையானவை) கிடைப்பதாகத் தெரியவில்லை.
இருப்பது நல்லது. நான் xkb கட்சி...;-)

ubuntu-restricted-xtras பொதி, vlc-player மின்னெழுத்து தெளிவாக தெரிவது
ஆகியவை பயனரின் பார்வையில் புத்தகத்திற்கு அவசியம். அதனை ஆங்கிலத்தை
அடிப்படையாக கொண்டு இயற்ற வேண்டும்.. தமிழ் வசதிகள் செய்து கொள்ள
குறிப்புகள் தருகிறபோது அதற்குரிய பொதிகள் புத்தகத்தோடு கொடுக்கப்படும்
வட்டிலிருந்து இவையெல்லாம் பெறக்கூடியதாய் இருக்க வேண்டும்.

அது புத்தக முயற்சிக்கு முன்னதான தேவையான முதற்கட்ட ஆய்வின் அனுமானங்கள்...

--

ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list