[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Sun May 4 16:20:47 BST 2008


ஆமாச்சு


உபுண்டு-ஹார்டி-கநோம் சூழல்-locale=ta_IN தமிழ் சூழல்

தாங்கள் கூறியபடி /etc/fonts/conf.avail  இல் சேர்த்து sym link
ஏற்படுத்தி பினவருமாறு conf.d அடைவில் இருப்பதை உறுதிப்படுத்தினேன்;

lrwxrwxrwx 1 root root   41 2008-05-04 20:11 20-lohit-tamil.conf ->
/etc/fonts/conf.avail/20-lohit-tamil.conf

மீள் புகுபதிகை செய்து புதிய அமர்வில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற ஏமாற்றம்.

அடுத்தடுத்து பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தேன்;

1. sudo fc-cache  -fv கட்டளை (font regeneration க்கு) + மீள் புகுபதிகை

2. sudo defoma-reconfigure கட்டளை   + மீள் புகுபதிகை

3. மீள் ஆரம்பித்தல் (Restart by shutdown and boot)

4.  locale=ta_IN.UTF-8 உடன்  மீள் KDE பணிமேசைக்கு புகுபதிகை
செய்துஅதில் Regional and Languages இல் மொழிக்கு தமிழ் தேர்வுடனான
அமர்வு

5.  locale=en_US.UTF-8 , KDE , தமிழ் மொழி அமர்வு

6.  locale=en_US.UTF-8 , Gnome அமர்வு (அதாவது ஆங்கில  சூழில் மட்டும்)

மேற்கூறிய எல்லா  சூழல்களிலும் பிரச்சினை அப்படியே உள்ளது.

தாங்கள் எந்த  சூழல், locale இல் தீர்வு கண்டீர்கள்.

வேறு ஏதாவது செய்திருந்தீர்களா?

உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
செய்து பார்த்து சொல்லுங்கள்.

தாங்கள் காட்டும் sym link போல கட்ஸியில் Lohit Gujarathi க்கு
இருப்பதையிம் பார்த்தேன். கட்ஸியில் Lohit Tamil க்கு அப்படி இல்லைதானே ?

சேது


2008/5/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
> வணக்கம்
>
> தீர்ந்தது போல் தெரிகிறது.
>
> கீழ்காண்பவற்றை செய்து தங்களது பதிலைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>
>  அடைவிற்குள் போடவும்.
>
> 1) இம்டலுடன் இணைக்கப் பட்டுள்ள கோப்பை (20-lohit-tamil.conf)
> /etc/fonts/conf.avail (இவ்வடைவில் இயற்ற தாங்கள் முதன்மை பயனர் அந்தஸ்து
> பெற்றிருத்தல் வேண்டும் என்பதை கருத்தில் கொள்க)
>
> 2) முனையத்திலிருந்து கீழ்காணும் ஆணையிடவும்.
>
> $ sudo ln -s  /etc/fonts/conf.avail/20-lohit-tamil.conf
> /etc/fonts/conf.d/20-lohit-tamil.conf
>
> இது அக்கோப்பிற்கு இணைப்பு போலியை உருவாக்குகிறது.
>
> செய்ததும் அமர்வை மீளத்துவக்கவும். உலாவியில் http://ubuntu-tam.org
> பார்க்கவும். எப்படி தெரிகிறது என உடன் பதிலெழுதவும்.
>
> --
> Regards,
>
> Sri Ramadoss M
> --
>  Ubuntu-l10n-tam mailing list
>  Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


More information about the Ubuntu-l10n-tam mailing list