[உபுண்டு_தமிழ்]Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக உள்ளனவா?

K. Sethu skhome at gmail.com
Tue Apr 15 21:20:45 BST 2008


2008/4/16 M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>:

> சேது, மற்றும் உபுண்டு குழுவினருக்கு,
>
>
> இந்த எழுத்துரு துல்லியமாகத்தெரியாத பிரச்சினையை வழுத்தாக்கல் செய்யலாமா/
>
>
> அவசரமாகச்செய்தாகவேண்டும். இன்னும் 9 நாட்களே உண்டு.
>
> சூரியன் டொட் கொம் உள்ளிட்ட பல எழுத்துருக்களை சோதித்துவிட்டேன்.
> எதுவுமே துல்லியமாகத்தெரிகிறதாயில்லை.
>

மயூரன் முதலில் எனது screen-shots சில பாருங்க:

1. http://i29.tinypic.com/2f03qlk.jpg
(இதையும் பின்னர் வரும் ஏனைய  tinypic jpg படங்களையும் FF வில் பார்க்ககையில்
அதில் cursor க்கு பதிலா தெரியும் பூதக்கண்ணாடியை சொடுக்கி பெரிதாக்கிய பின்
பார்க்கவும்)

இப்படம் எனது தள எழுத்துருக்களுக்கான அமைப்புக்கள்
(System-->Preferences-->Appearance, then Fonts tab).

2. http://i28.tinypic.com/2yoodc9.jpg
இது gedit இல் தளத்தின் தமிழிற்கான முன்னிருப்பு எழுத்துருவான Lohit-Tamil
பாவிக்கையில் முறையே 12,14,16 அளவுகளில் தென்படும் விதம். அளவு 12 ஆக
இருக்கையிலேயே ஒவ்வொரு எழுத்துக்களிலும் சில பகுதிகள் அழிந்துள்ள போல்
துல்லியம் குறைவாக தெரிகின்றன. அளவு 14, 16  ஆயின் துல்லியத்தில்  அவ்வளவு
குறைவில்லை. ஆனால் நிறம் சாம்பல் பக்கம் கூடுதலாகத் தெரிகிறது. கறுமை செறிவு
அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

3. http://i30.tinypic.com/2ziu1lk.jpg
மேலுள்ள சோதனையை Lohit-Tamil க்குப் பதில் சூரியன் டொட் கொம் பாவிக்கையில். எண்
கண்ணுக்கு இவ்வெழுத்துருவுடன் துல்லியம் மற்றும் நிறம் ஆகியன போதுமானவைகளாகவே
உள்ளன.

4. http://i32.tinypic.com/2reh3bs.jpg
இது எனது பயர்பாக்சில் எழுத்துருக்களிக்கான அமைப்புக்கள். Fonts for: என்பதற்கு
Western, Tamil, Other Languages ஆகிய 3 க்கும் இதே அமைப்புக்களைத்தான்
இட்டுள்ளேன். அதாவது வலைப் பக்கங்கள் சொந்த எழுத்துருக்கள் எவை என்ற வரையறைகள்
இல்லாமல் வரின் சூரியன் டொட் கொம் பாவிக்கும் படியானது இவ்வமைப்பு.

5. http://i27.tinypic.com/34ioc8x.jpg
இது மேற்காட்டிய எழுத்துருக்கள் அமைப்புக்கள் உடன் ஜி-மெயிலில் பார்க்கையில் -
இடது மேற் பக்கம் FF இன் View-->Text Size என்பதை Normal (Ctrl+0) என்று வைத்து
பார்க்கையில் தெரியும்வாறு. வலது கீழ் பக்கம் உள்ளது View-->Text Size -->
Increase (Ctrl++)  எனபதை இரு தடவை சொடுக்கி பெரிதாக்கி பார்க்கையில்.
நன்றாகத்தானே இருக்கின்றன.

எனது மேற்காட்டிய அமைப்புக்களை தங்கள் கணினியிலும் இட்டு பார்த்துக் கூறுங்கள்.


~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080416/84f18c6e/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list