[உபுண்டு_தமிழ்]கட்ஸி வேகப்பிரச்சினை

Sethu skhome at gmail.com
Wed Oct 31 05:11:40 GMT 2007


On 10/31/07, amachu <amachu at ubuntu.com> wrote:
> On Wednesday 31 October 2007 07:50:09 K. Sethu wrote:
> > கட்ஸியில் வேகப்பிரச்சினை இருப்பதாக கூறப்படும் தகவல்கள் எனக்கு கேடபதற்கு
> > வியப்பாகவுள்ளன.
>
> தாங்கள் மேம்படுத்தினீர்களா அல்லது புதிதாக நிறுவினீர்களா?
>
> மேம்படுயிருந்தீர்களானால் மாற்று வட்டு கொண்டா
> அல்லது பிணையத்தின் வாயிலாகவா?

பைஸ்டியிலிருந்து மேம்படுத்தவில்லை. பைஸ்டி அப்படியே உள்ளது.
உபுண்டு-கட்ஸி-பீட்டா வட்டை இம்மாத முதலில் தனியாக நிறுவியிருந்ததைத்தான்
Oct 18 இன் பின் பிணைய வாயிலாக இறுதி வெளியீட்டுக்கு மேம்படுத்தினேன்.
அதன் பின் KDE, Xubuntu மற்றும் edubuntu க்கான பல மென்பொருட்களைச்
சேர்த்ததும் பிணைய வாயிலாகவே. இதுவரை பாவித்துப் பார்த்துள்ளதும் கனோம்
மேசைத்தளத்தில்தான்.

3 நாள் முன் நிகழ் வட்டு அமர்வுகளுக்கு உதவும் என உபுண்டு-கட்ஸியின்
இறுதி வட்டையும் எனது கட்ஸியில் இருந்து ktorrent வழி பதிவிறக்கினேன் -
அன்று மந்த வேகமாகவே சேவை இருந்தது. ஆனால் அதன் முன் வாரத்தில் SuSe10.3
முழு DVD (4.5 GB ?) அதே கட்ஸியிலிருந்து ktorrent வழி பதிவிறக்கிய போது
வழக்கமான நல்ல வேகத்தில்தான் வந்தது!

மாற்று வட்டு / குபுண்டு / சுபுண்டு நான் பதிவிறக்கவில்லை.

மந்த வேகப் பிரச்சினை கண்டுள்ளோர் KDE பாவனையில் மட்டுமா? அல்லது எல்லா
மேசைத்தளங்களிலுமா?

நான் ADSL க்கு router (4-ports) தான் பாவிக்கிறேன். ஒரு வேளை modem
மட்டும் பாவிப்பவர்களுக்கு மந்த வேகம் ஏற்படுகிறதோ? (router க்கும்,
modem க்கும் அமைவடிவங்களில் வித்தியாசங்கள் உண்டல்லவா?)

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list