[உபுண்டு_தமிழ்]கட்ஸி வேகப்பிரச்சினை

K. Sethu skhome at gmail.com
Wed Oct 31 02:20:09 GMT 2007


மயூரன் எழுதியது:

 >>

Subject: [உபுண்டு_தமிழ்]கட்ஸி வேகப்பிரச்சினை

From: M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>
To: உபுண்டு தமிழ் குழுமம் <ubuntu-l10n-tam at lists.ubuntu.com>, K. Sajee 
<ksajee at gmail.com>
Date: Mon Oct 29 2007 17:24:49 GMT+0530 (IST)

> http://osnovice.blogspot.com/2007/10/slow-internet-connection-in-ubuntu.html
>
> இந்த தொடுப்பில் சொல்லப்பட்டவை தீர்வைத் தருகின்றனவா/
>
> (நான் இன்னும் கட்ஸிக்கு மாறவில்லை)
>
> -மு.மயூரன்
>
<<

கட்ஸியில் வேகப்பிரச்சினை இருப்பதாக கூறப்படும் தகவல்கள் எனக்கு கேடபதற்கு 
வியப்பாகவுள்ளன. ஏனெனில் எனது கட்ஸியில் இணையத்துடன் தொடர்பு மந்தமாக காணப்படவில்லை. 
தங்கள் மடல்களைப் பார்த்தபின்  கடந்த இரு நாடகளுக்குள் என்னிடமுள்ள ஏனைய நிறுவல்களான 
பைஸ்டி, சூசே 10.3,  மாண்டீரிவா-2008,  FC7,  டெபியன்-எட்ச்  ஆகியவைகளுடன் வெவ்வேறு 
நேரங்களில் சில ஒப்பீடுகள் செய்யதே இதை எழுதுகிறேன்.

தற்காலங்களில் நான் பாவிக்கும் 512 kbits/sec அதிகபட்ச பதிவிறக்க வேகம் தரவேண்டிய 
SLTNET adsl  இணைப்பில் அதிகாலை நேரங்களில்தான் அதிக வேகம் கிடைக்கும். இன்று 6:30 
அளவில் 3.4 MB தபுண்டுவை கட்ஸியிலிருந்து பதிவிறக்க 57 வினாடிகள் எடுத்தன - அதாவது 
கிட்டத்தட்ட 59~60 kBytes/sec (~480 kbits/sec). இதைவிட கூடுதல் வேகம் எனது 
தொடர்பில் நான் இதுவரை கண்டதில்லை. (SLTNET adsl  மாலை / முன்னிரவு  நேரங்களில்  
அநேகமாக 100  kbits/sec  வரையில்தான்  கிடைக்கிறது - )

எனது கட்ஸி நிறுவல் முன்னர் வந்த உபுண்டு-கட்ஸி-பீட்டாவில் ஆரம்பித்து பின் பிணைய மூலமே 
இறுதி வெளியீட்டுக்கு மேம்படுத்தப்பட்டது. கனோம்தான் பாவிக்கிறேன். மேலும் கே.டீ.ஈ, xFce 
மேசைத்தளங்களும்   எடுபுண்டுவிற்கான themes / applications எல்லாம் சேர்த்துமுள்ளேன். 
கனோம் சூழலில் எல்லாம் சிறப்பாகவே உள்ளன. ஏனைய சூழல்கள் இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

மயுரன் சுட்டிக்காட்டிய 
http://osnovice.blogspot.com/2007/10/slow-internet-connection-in-ubuntu.html
பக்கத்தில் தற்போது பாரக்கவும் - அதில் கட்ஸிதான்  சிறந்தது  என வாக்களித்தோர்களில்  
(தற்போது 74%) நானும் ஒருவன்!

~சேது






More information about the Ubuntu-l10n-tam mailing list