[உபுண்டு_தமிழ்]கட்ஸிக்கு மேம்படுத்த...

K. Sethu skhome at gmail.com
Thu Oct 18 15:35:37 BST 2007


ஆமாச்சு Wed Oct 17 2007 20:05:04 GMT+0530 (IST) எழுதியது:

> வணக்கம்,
>
> நாளை கட்ஸி வெளிவருவதை முன்னிட்டு பைஸ்டியிலிருந்து கட்ஸிக்கு மேம்படுத்துவதற்கான பக்கமொன்றி
> னை வளர்த்தெடுத்துள்ளோம்
> அணுகவும்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=கட்ஸிக்கு_மேம்படுத்த
>   
அதில் மாற்று வட்டுக்களைப் பற்றியும் தாங்கள் எழுதியுள்ளீர்கள். எனவே கோபுண்டு நிறுவுவதைப் 
பற்றியும்  குறிப்பிடலாமே?.

கோபுண்டு நிறுவல் உபுண்டு  நிறுவுவதற்கான மாற்று வட்டைக் கொண்டே . பார்க்க :
http://cdimage.ubuntu.com/gobuntu/daily/current/

நிறுவப்பட்டுள்ள உபுண்டுவிலிருந்து கோபுண்டு ஆக மாற்ற பினவரும் கோபுண்டு மடலாற்ற 
குழும மடலில் பாருங்கள்:
https://lists.ubuntu.com/archives/gobuntu-devel/2007-October/000296.html

மாற்று வட்டிலிருந்து கோபுண்டு மேசைத்தளம் மட்டுமான இயங்குதளம் நிறுவுகையில்  அநேக  
மென்பொருள்  செயலிகள் அவ்விறுவட்டில்  உள்ளடக்கப்படாமையால்  நிறுவிய பின்னே 
பிணையத்திலிருந்தே மென்பொருட்களை நிறுவ வேண்டியிருக்கும் என மேற்கூறிய மடலாற்ற 
குழுமத்தில் இங்கும் அங்கும் சில மடல்களை வாசித்ததில் கண்டேன்.

~சேது




More information about the Ubuntu-l10n-tam mailing list