[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது

K. Sethu skhome at gmail.com
Wed Nov 14 17:10:29 GMT 2007


ஆமாச்சு:
//உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.

http://packages.debian.org/ttf-tamil-fonts//

நண்பர்களே கட்ஸியில் இன்னொரு மாற்றத்தையும் அவதானிக்கவும். பைஸ்டி வரைக்கும் உபுண்டுவின் ttf-tamil-fonts பொதியில் 3 TAMu, 3 TSCu அத்துடன் LohitTamil என மொத்தமாக 7 தமிழ் எழுத்துருக்கள் இருந்து வந்தன. அதாவது டெபியனின் ttf-tamil-fonts பொதியைப்போலவே (http://packages.debian.org/etch/ttf-tamil-fonts/all/filelist).  

அப்பொதி உபுண்டு இறுவட்டுகளில் உள்ளடக்கப்பட்டு வந்தது.

ஆனால் கட்ஸியின் இறுவட்டில் ttf-tamil-fonts பொதி இல்லை. மாறாக இறுவட்டில் உள்ள ttf-indic-fonts-core என்ற பொதியுள்  LohitTamil மட்டும் உள்ளது. ஏனைய வழக்கமான TAMu, TSCu எழுத்துருக்கள் ஆறும் தறபோது உபுண்டு-கட்ஸியின் Main repo வில் உள்ள ttf-tamil-fonts பொதிக்குள் தான் உள்ளன. 

இதானால்தான் மயூரன் ttf-tamil-fonts பொதியை முதன் முறையாக தபுண்டுவினுள் சேரத்துள்ளார் எனத்தெரிகிறது. அது நன்று. தபுண்டுவின் நிறுவி அப்பொதியையும் ஏனைய deb களைப்போலவே சரியாகவே நிறுவுகிறது. 

ஆனால் மற்ற 3 எழுத்துருக்கள் (Bamini, SooriyanDotCom and TABMaduram) நிறுவும் வரிகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. 

இப்போது ( ~10:30 pm) தூக்கம் ஆதிக்கம் தொடங்கிவிட்டது -;) எனவே நாளை இரவு அதைப்பற்றி தொடர்வேன்.

~சேது




 
 


-------- Original Message --------
Subject: Re: [உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு 
வெளிவந்துவிட்டது
From: amachu <amachu at ubuntu.com>
To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
Date: Tue Nov 13 2007 21:25:23 GMT+0530 (IST)
> On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote:
>   
>>  திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன்,
>> tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
>>     
>
> மயூரன்,
>
> டெபியன் http://www.debian.org/social_contract#guidelines நெறிகளுக்கிணங்கி மின்னெழு
> த்துக்கள் கிடைத்தால் சொல்லுங்ளேன்.
>
> சமீபத்தில் எல்காட் நிறுவனம் வெளியிட்டவற்றை டெபியனில் சேர்க்க  வழுத் தாக்கல் செய்தேன். 
> http://bugs.debian.org/cgi-bin/bugreport.cgi?bug=448727
>
> உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.
>
> http://packages.debian.org/ttf-tamil-fonts
>
> அன்புடன்,
> ஆமாச்சு
>   





More information about the Ubuntu-l10n-tam mailing list