[உபுண்டு_தமிழ்]உபுண்டு கொள்கை...

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sun Mar 11 18:25:52 GMT 2007


கொள்கை

உபுண்டுவினுடைய நமது பணியானது மென்பொருள் சுதந்திரத்தினைப் பற்றிய
தத்துவத்தினால் உந்தப்படுகிறது. மென்பொருள் தொழில்நுட்பத்தின் பயன்களை உலகின்
அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று பரப்ப இத்தத்துவம் பயன்படும் என்பது
நமது நம்பிக்கை.

கட்டற்ற மென்பொருளும் திறந்த மென்பொருளும்

கட்டற்ற மற்றும் திறந்த மென்பொருட்களைக் கொண்டு, ஒரு இயங்குதளத்தினையும்
அனைத்து பயன்பாடுகளையும் வழங்க வல்ல செயலிகளையும், சமூகம் சார்ந்த முறையினால்
உந்தப்பட்டு, உருவாக்க முற்படுகின்ற திட்டமே உபுண்டு. மென்பொருள் சுதந்திரம்
குறித்த உபுண்டுவின் மையமான கொள்கைகளுக்கு மூலமாக இருக்கும் அம்சங்களாவன:

1) கணினியினைப் பயன்படுத்தக் கூடிய எவருக்கும் அவருடைய மென்பொருளை
உரிமத்திற்கான கட்டணமெதுவும் செலுத்தாது  எந்தவொரு காரணத்திற்காகவும் இயக்க,
பிரதியெடுக்க, விநியோகிக்க, கற்க, பகிர்ந்து கொள்ள, மாற்ற மற்றும் மேம்படுத்தக்
கூடிய சுதந்திரம் அளிக்கப் பட வேண்டும்

2) எந்தவொரு பயனரும் தாங்கள் விரும்பும் மொழியில் தமது மென்பொருளை
பயன்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.

3) இயலாமையொடு பணிபுரிகின்ற சூழலில் இருந்தாலும் கூட கணினியின் எந்தவொரு
பயனருக்கும் மென்பொருளை பயன்படுதுகின்ற வாய்ப்புகளனைத்தும் வழங்கப்பட வேண்டும்.

தொடரும்...

மூலம்: http://www.ubuntu.com/ubuntu/philosophy

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070311/cfbf64c2/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list