[உபுண்டு_தமிழ்]அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!
ம. ஸ்ரீ ராமதாஸ்
shriramadhas at gmail.com
Sun Mar 11 03:31:33 GMT 2007
தொடர்ச்சி..
இப்படி பலவகையான சட்டங்கள் எழுப்புகின்ற குறிப்பிட்ட பிரச்சனைகள் "அறிவுசார்
சொத்து" என்பதன் பரந்த நோக்கில் காணாது போய்விடுகின்றன. இப் பிரச்சனைகள்
அவற்றுக்குரிய சட்டங்களுக்கேயான குறிப்பிட்ட அம்சங்களால் எழுபவை. "அறிவு சார்
சொத்து" என்கிற பதம், மக்கள் இவற்றை புறக்கணிக்க ஊக்குவிக்கின்றன.
உதாரணத்திற்கு இசையை பகிர்ந்து கொள்வது தகுமா என்பது பதிப்புரிமை சட்டத்தில்
வருகின்ற பிரச்சனை. சுயயுரிமைச் சட்டத்திற்கு இதில் எந்தவொரு இடமும் இல்லை.
பணம் குறைந்த நாடுகள் உயிர் காக்கும் மருந்துகளை தயார் செய்து குறைந்த விலைக்கு
உயிர் காக்கும் பொருட்டு விற்பனை செய்யலாமா என்பது சுயயுரிமைச் சட்டத்தில்
வருகின்றது. பதிப்புரிமைச் சட்டத்திற்கு இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை.
மிகைப்படுத்தப்பட்ட குறுகிய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இவற்றை பார்க்கின்ற
எவராலும் இவ்வித்தியாசங்களை உணர முடியாது. ஏனெனில் இவை இரண்டுமே தமக்குள்
உடன்படாதவை. மேலும் இவையிரண்டும் முழுமையான பொருளாதாரப் பிரச்சனைகளும் அல்ல.
இவ்விரண்டினையும் ஒரே கண்ணோட்டத்தில் தாங்கள் பார்க்க முற்பட்டால், அது இவற்றை
தாங்கள் தனித்தனியே தெளிவாக பார்கக் கூடிய திறனுக்கு முட்டுக்கட்டையாய்
அமையும்.
ஆக, அறிவுசார் சொத்து என்ற பொருளைப் பற்றிய கருத்துக்களும் அதை மிகைப் படுத்த
மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் முட்டாள் தனமானவை. இவையனைத்தையும்
ஒன்றென கருத தாங்கள் முற்பட்டால் மிதமிஞ்சிய மிகைப்படுத்தப்பட்ட
சிந்தனைகளிலிருந்தே தங்களின் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும். இது
நிச்சயமாக நல்லதல்ல.
சுயயுரிமை, பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை எழுப்பும் பிரச்சனைகளைப்
பற்றி தெளிவாக சிந்திக்க தாங்கள் விரும்பினால் இவையனைத்தையும் ஒன்றாக
கோர்க்கும் எண்ணத்தை மறந்துவிடுங்கள். இவற்றை வெவ்வேறானதாகக் கருதுங்கள்.
அடுத்த வழி "அறிவுசார் சொத்து" என்கிற பதம் வழங்க முற்படுகின்ற குறுகிய
சொற்பமான அணுகுமுறைகளை புறக்கணியுங்கள். இவற்றை அதனதன் முழுமையானப் பொருளில்
வெவ்வேறானதாகக் கருதுங்கள். அங்ஙனம் செய்தால் இவற்றைப் பற்றி தெளிவாகக் கருதும்
வாய்ப்பினைப் பெறுவீர்கள்.
உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தில் மாற்றத்தினை கொண்டுவருவதென்றால், மற்றவைக்கு
மத்தியில் அதன் பெயரையே மாற்றக் கோருவோமாக.
பார்க்க: http://www.fsfeurope.org/documents/wiwo.html
நிறைவுற்றது!
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070311/3b091361/attachment-0001.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list