[உபுண்டு_தமிழ்]குநோம் முனைய பிரச்சனை

K. Sethu skhome at gmail.com
Thu Mar 1 17:49:32 GMT 2007


On 02/27/2007 11:41 AM, ம. ஸ்ரீ ராமதாஸ் wrote:
> தாங்கள் சொல்வதை மெதுவாக  உணர்ந்து  கொள்ள முயற்சிக்கிறேன்.
>
> மேலும் IIIM எனப்படுகிற  முறையில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும். அது 
> வெற்றிப்  பெறும்  பட்சத்தில் வரைகலை இடைமுகப்பு அல்லாத  கணினியில் கூட ஆங்கிலமற்ற 
> மாற்று  மொழிகளில் உள்ளிட  முடியும்  என படித்தேன்....
>
> இது  குறித்து  தங்களின் கருத்துக்களை அறிய  விழைகின்றேன்...
>
இருக்கலாம், அதைப்பற்றி வாசித்ததில்லை. தாங்கள் பார்த்த கட்டுரை எங்குள்ளது? அது IMBUS 
என்பதைப் பற்றியா?

IMBUS என்ற புதிய  உள்ளிடும் கட்டமைப்பு (input framework) உருவாகி வருகிறது. 
இவ்வருடத்தில் முதற் கட்ட வெளியீடுகள் வெளிவர உள்ளன.  James Su   (SCIM project 
leader) மற்றும் Hideki Hiura (IIIMF Project leader) கூட்டாக இப் project யை 
நடத்துகின்றனர். இந்த IMBUS ஒரு generic low level input architecture. அதனால் 
higher level windowing components, widgets,  dte  என்பவற்றில் சாராத அடிப்படை 
பொது உள்ளிடல் கட்டமைப்பாம்.. அவ்வண்ணம் ஏற்படுகையில்  ஒரு பொது முகப்பின் ஊடாக scim, 
iiimf, uim, m17n என எந்த  உள்ளிடும் முறையும் ஒரு பயனர் இலகுவாகச் செயலிக்க 
முடியுமாம். தற்போது SCIM இன் அடிப்படை engine களில் மேம்படுத்தல்களை நிறுத்தி வைத்து 
IMBUS உருவாக்கத்தில் முனைந்துள்ளதாகவும் சில மாதமுன்   James Su கூறியிருந்தார். பார்க்க:

http://www.nabble.com/Question-regarding-the-status-of-the-next-version-of-SCIM-t2564335s16577.html

மேலும் சில தகவல்கள் பார்க்க:

http://www.nabble.com/Proposal:-unified-input-method-keyboard-layout-switching-support-for-kde4-t2804846s16577.html
(இதில் Liu Cougar -SKIM எழுதியவர் இன் கேள்விக்கு James Su வின் பதில்களைப் பாருங்கள்)

http://lists.freedesktop.org/archives/sitewranglers/2006-March/001594.html
http://www.freedesktop.org/wiki/Software_2fimbus

மேலும் UIM மேம்பாட்டாளர்கள் இதைப்பற்றி சொன்னது, பொறுத்திருந்து முதல் வெளியீடுகள் வந்த 
பின் IMBUS முயற்சிகளில் பங்குகொள்வது பற்றி முடிவு செய்வோம் என. பார்க்க: 
http://lists.freedesktop.org/archives/uim/2006-November/001618.html  (இப் 
பக்கத்தின் கீழ் அரைப்பகுதி தொடங்குமிடத்தில் பாருங்கள்).

அந்த IMBUS ஆனது வரைகலை இடைமுகப்பு இல்லாத சூழல்களிலும் இயக்கப்படக்கூடியதாக 
இருக்கும் என நினைக்கிறேன் (lower level architecure என்பதால்).


IIIMF கட்டமைப்பில் தமிழ் மற்றும் பல இந்திய மொழிகளை உள்ளிடுவது UNIT LE என்னும் பொறி 
மூலம் (UNIT = UNIcode Table based input method. LE = Language Engine).  
பார்க்க: 
http://anakin.ncst.ernet.in/~aparna/consolidated/x1963.html#im_iiim_rsn 
.  IIIMF -unitle மூலம் தமிழ் உள்ளிடும் முறை பற்றி 2005 இல் தமிலினிக்சில் சைத்தண்யா 
மற்றும் வேறு சிலரும் சில தடவைகள் விளக்கி எழுதியிருந்தார்கள்.   நான் பழைய FC3, FC4 
களில் பாவித்துப் பார்த்திருக்கிறேன். பல செயலிகளை திறக்கையில் iiimf server நிலைத்து 
நிற்காமல் போய்விடும். டாப்பரிலும், எட்ஜியிலும் எப்படி ஆரம்பிப்பது என்பதை இன்னமும் 
கண்டறியவில்லை.

முனையத்தில் தமிழ் உள்ளிடல் சம்பந்தமாக எனது வேறு சில  அவதானிப்புக்களை  பின்னர் 
எழுத்துகிறேன் .

~சேது 





More information about the Ubuntu-l10n-tam mailing list