[உபுண்டு_தமிழ்]இது ரொம்ப முக்கியம் சாமியோஓஒ!

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Jun 23 01:34:38 BST 2007


தயை செய்து இந்த வார இறுதி விடுமுறையில் கீழ் கண்ட கேள்விகளுக்கு விடை
தரவும். மொழியாக்கம் குறித்த சில நடைமுறைகளை வகைப்படுத்த இது மிக
முக்கியம்.

பரிசோதனை:
தமிழ் சூழலில் இருக்க வேண்டும்.
இப்போது scim வேலை செய்வதில்லை. (சரிதானா?)
ஆகவே தமிழ் விசைப்பலகைகளை நிறுவ வேண்டும். இதற்கு:
                    அமைப்பு> விருப்பங்கள் >விசைப்பலகை> இட
அமைவுகள்>சேர்>india>tamil>tamil unicode அல்லது tamil etc

இப்போது நிரல்களை தேர்ந்தெடுத்து ஏதேனும் தமிழில் தெரியும் நிரலை இயக்குக.
(உரை திருத்தி?)
விரைவு விசைகள்/குறுக்கு விசைகள் எப்படி செயல்படுகின்றன?

இவை பல விதமாக இருக்கலாம்.
_H
_உ
_க
_கோ
(_U)

இவை எப்படி செயல் படுகிறன என கவனிக்கவும்.
பின் விசைப்பலகை மொழியை மாற்றி மீண்டும் சோதிக்கவும்.
இவற்றை எனக்கு எழுதவும்.
இதை முன்னிட்டு எப்படி விரைவு விசைகள்/குறுக்கு விசைகளை அமைப்பது என
ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.

திவே

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list