[உபுண்டு_தமிழ்]கே. ப தமிழாக்கம் தேவைகள்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Jun 22 03:23:31 BST 2007


கேப  தமிழாக்கத்தில் PO  கோப்புகளில் கண்டெடுக்கும் குறியீடுகளும் அதற்கான
விளக்கங்களும்.

1) po கோப்புகளில் பொதுவாக ஒவ்வொரு சரத்தையும் பொறுத்த மட்டில் மூன்று
விஷயங்கள் உள்ளன. முதல் வரி "#" துவங்கலாம். இது நமக்கு துப்பு கொடுக்க
உதவுகிறது. இதில் மூல நிரலில் எந்த பாதையில் கொடுக்கப் பட்டிருக்கும் சரம்
இருக்கிறது  போன்ற விஷயங்கள் கொடுக்கப் பட்டிருக்கலாம். அடுத்தது "msgid"  -
இது பெரும்பாலும் நிரலின் மூல மொழியில் உள்ள  சரத்தினைக் கொண்டது. "msgstr" -
இவ்விடத்தே  நாம்  மூல  நிரலின் சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்லினை  உள்ளிட
வேண்டும்.

2) பயன்படுத்தப் படாத சரங்கள் #~  குறியீட்டுடன் துவங்கும்.  இவற்றை  அகற்றி
விடலாம்.

3) & - இது செயலொன்றினை  துரிதமாகச் செய்ய கொடுக்கப் பட்டிருக்கும் குறுக்கு
வழி. உதாரணம்,
&File - Alt+F விசையினை  தட்டுகிற போது இதற்கான செயல் துவங்கும்.
தெரிந்ததுதான்.
இங்ஙனம்  செய்கின்ற போது ஒரே  மெனுவில் ஒரே  விசையில் இரு செயல்கள் கொடுத்திடாத
வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

4) "_:" - கொடுக்கப் பட்ட சொல் பயன்படுத்தப் படும் இடத்தினைச் சுட்ட இது
பயன்படுத்தப் படுகின்றது.  உதாரணம்: home.. இது பயனரின் இல்ல அடைவா  இல்லை
பக்கமொன்றின் துவக்கமா  என்பதைச் சுட்ட _:  உதவும்.  ஆகையால் இவ்வரிகளை  msgstr
க்கு தமிழாக்கம் செய்வதயோ, நகல் எடுப்பதையோ  தவிர்க்க வேண்டும்.

உதாரணம்:

#: kdeui/kstdaction.cpp:669
msgid ""
"_: beginning (of line)\n"
"&Home"
msgstr "&அகம்"

#: src/kernel/qaccel.cpp:562
msgid ""
"_: QAccel\n"
"Home"
msgstr "ஆரம்பம்"


பன்மையினை  உணர்த்த உதவும் "_n:" இங்ஙனம் கையாளப் படவேண்டியதே...

தொடர்கிறேன்...


துப்பு:  இதில் வேறுபட்ட நிலைப் பாடுகள் இருப்பின் தெரியப் படுத்தவும்.
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070622/717d806e/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list