[உபுண்டு_தமிழ்]கே. ப தமிழாக்கம் தேவைகள்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Jun 22 03:33:57 BST 2007


அடுத்தது,

" போன்ற மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தப் படவேண்டுமாயின் அதன் பொருட்டு \ போன்ற
எஸ்கேப் எழுத்துக்களைப் பயன்படுத்துதல் அவசியம்.  இல்லையெனில் சரத்தின் முடிவாக
எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும்,  நாம் ஒரு பி.ஓ  கோப்பினை  முழுமையாகத் தமிழாக்கம் செய்தும் சிலச்
சரங்கள் ஆங்கிலத்தில் தெரிந்தால்.. அவை  அங்ஙனம் நேர அவை  பயன்படுத்தும்
நிரலகங்கள் காரணமாக இருக்கலாம்.

மேலும் நாம் சந்திக்கக் வாய்ப்பிருக்கக் கூடிய மற்றுமொரு பிரச்சனை எழுத்துக்கள்
ஒன்று  சேர்க்கப் பட்டு குழப்பப் பட்டிருக்கும்.  களத்தின் சொற்களின்
எண்ணிக்கை  குறைவாகக் கொடுக்கப் பட்டு இருக்கலாம்.  நாம் மூல நிரலுக்கு நிகரான
சொல்லினை சற்று கூடுதல் சொற்கள் கொண்டவையாக கொடுக்கிற போது இங்ஙனம்
நேர்வதுண்டு.

தொடர்கிறேன்..

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070622/6e1f7e1e/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list