[உபுண்டு_தமிழ்]மூடுல்

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Jul 14 04:49:39 BST 2007


On 7/14/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> மூடுல் கத்துக்குட்டிக்கு ஏதாவது சொல்லிக்கொடுத்தால் நல்லது!
>
> இது கத்துக்கொடுக்கவா? அல்லது கத்துத்தரவா?
> நிறுவியபின் அடுத்த வேலை என்ன?
> திவே


எமக்குத் தெரிந்த வரையில்.. இது ஆஸ்திரேலியா சரக்கு...

இணைய வழி கல்விக்காக உருவாக்கப் பட்ட செயலி மூடுல்.

இதில் நாம கத்துக்க கத்து குடுக்க ரெண்டுத்துக்குமே வழி இருக்கு..

ஆசிரியர் மாணவராக பயனர்களைப் பிரிக்கலாம்..

ஒரு திட்டத்தை  துவக்கி.. அதை  இத்தனை  நாளைக்குள் முடிக்கலாம்.. போன்ற வசதிகள்
உள்ளிட்டவை  இதில் செய்யமுடியும்..

உதாரணத்துக்கு,  தமிழ் இலக்கணம் கற்க ஆறு மாசம்.. இதெல்லாம் படிகள்.. இதற்கு
இன்னார் ஆசான்.. இந்த தேதிக்குள் பதிவு செய்யணும்.. இத்தனாம் தேதில திட்டம்
முடியும்.. இப்படி..

எமக்குத் தெரிந்து ஐ.ஐ.எம் பங்களூரில் திறம்பட நிறுவப் பட்டு பயன்படுத்தப்
பட்டும் வருகிறது..

http://moodle.iimb.ernet.in/

மற்ற சிலப் பல்களைக் கழகங்களும் பயன்படுத்துவதாகத் தகவல்.. சரியாக நினைவில்
இல்லை..

கணினியில் இயல்பாக நிறுவ முடியாது... இணைய வழங்கியின் சேவையும்..  தரவுத்
தளத்தின் துணையும் தேவை..

இன்னும் சிலப் பல்கலைக் கழகங்களும் பயன் படுத்துவதாகத் தகவல்... கரும்பலகையே
இப்போதைக்கு சிறந்த வழி.. கொஞ்சம் காலம் பிடிக்கும்...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070714/2e852785/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list