[உபுண்டு_தமிழ்]ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Feb 28 02:52:33 GMT 2007


தொடர்ச்சி...

ஆயினும்,  சில திறந்த மூல ஆதரவாளர்கள் "திறந்த மூல டி.ஆர்.எம்" மென்பொருளை
பரிந்துரை செய்துள்ளார்கள். உங்களால் அண்ட முடியாத, திரிக்கப் பட்ட ஊடகங்களின்
மூல  நிரல்களை  பதிப்பித்து, பிறரால் அதனை மாற்றும் படி செய்கிற போது
வலிமையுடைய, நம்பகத்தன்மையுடைய    மென்பொருட்களை  உருவாக்க இயலும் என
நினைக்கிறார்கள். அதன் பிறகு உங்களால்  மாற்ற முடியாத படிக்கு அவை சாதனங்களில்
பதியப் பெற்று விநியோகிக்ககப் படும்.

இத்தகைய மென்பொருட்கள் திறந்த மூல உருவாக்க முறையில் செய்யப் பட்ட திறந்த மூல
மென்பொருட்களாகலாம்.  ஆனால் அவை  கட்டற்ற மென்பொருட்கள் ஆகா, ஏனெனில்
பயனரொருவருக்கு அம்மென்பொருளை  இயக்குவதற்கு உள்ள உரிமையை  இது மறுக்கிறது.
திறந்த மூல உருவாக்க  முறையினால் இத்தகைய மென்பொருட்கள் வலுவுிடையதாகவும்
நம்பகத்தன்மையுடையாதகவும் ஆக்கப் படுமானால் விளைவு இன்னும் மோசமாகி விடும்.
சுதந்திரத்திற்கு ஆபத்து!

திறந்த முல மென்பொருள் என்ற பதம் ஊக்குவிக்கப் பட்டதன் பிரதானக் காரணம் கட்டற்ற
மென்பொருட்கள் எடுதியம்புகின்ற தார்மீக சிந்தனைகள் சிலரை சங்கடப் படுத்தியது
என்பதே.  சுதந்திரம், தர்மம், பொறுப்புணர்ச்சி மற்றும் சவுகரியம் பற்றி பேசுவது
என்பது மக்கள் சாதாரணமாக புறந்தள்ளுகிற விஷயங்களான ஒழுக்கம் முதலியவற்றைப்
பற்றி சிந்திக்கச் சொல்லுவதாகும். இது உண்மைதான். இது அசவுகரியத்தை
தோற்றுவிக்கக்கூடியது. மேலும் மக்களில் சிலர் இவ்விஷயங்களின் பால்
கண்மூடித்தனமாக சிந்திக்க மறுத்து விடுவார்கள். இதனால் இவற்றைப் பற்றி பேசுவதை
நாம் விட்டு விட வேண்டும் என்பது இல்லை.

ஆனால் இதைத் தான் திறந்த மூல காரண கர்த்தாக்கள் செயல்படுத்த முடிவு
செய்தார்கள்.  தர்மத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் பேசாமல்
விட்டுவிடுவதன் மூலமாகவும் சில  கட்டற்ற மென்பொருட்களால்  நிதர்சனமாய்
நடைமுறையில் கிடைக்கக் கூடிய இலாபங்களைக் கணக்கில் கொண்டும், வர்த்தகத்தின்
பொருட்டு சில பயனர்களின் மத்தியில் அவற்றை  திறம்பட விற்க முடியும் என தீர்வு
கொண்டார்கள்.

தொடரும்...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070228/30fa41b4/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list