[உபுண்டு_தமிழ்]தமிழுக்கு சொல் திருத்தி
ம. ஸ்ரீ ராமதாஸ்
shriramadhas at gmail.com
Sat Feb 17 14:54:22 GMT 2007
மயூரன்,
தங்களின் இந்த சிந்தனை ஏற்புடையதே! சில இடங்களில் மட்டும் சொல் திருத்தியின்
பயன்பாடு தமிழுக்கும் தேவை என்பதை உணர்கிறேன்.
ஆங்கிலத்தினைப் பொறுத்தவரை இது அவசியம் தான். ஏனெனில் ஒரே சொல்லை வேவ்வேறு
வகையில் உச்சரிக்கமுடியும்.. எமது பெயரினை பலர் அப்படி தான் செய்கிறார்கள்
:-) put - என்றால் புட் என்பதும் but என்பது பட் என்பதும் ஆங்கிலத்தில் தான்!
தமிழில் அப்படிக் கிடையாது. "தமிழ்" என்கிற வார்த்தையை தலைக் கிழாக
நின்றாலும் வேறு மாதிரி உச்சரிக்க இயலாது. ஆனால் "ற" "ர" போன்ற
எழுத்துக்களைப் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய பிழைகள்... "ண" "ன" "ந"
போன்றவற்றை பயன்படுத்தும் போது ஏற்படும் குழபங்கள்... இரு சொற்களை இணைக்க
உதவும் போது விட்டுப் போகும் மெய் எழுத்துக்கள் முதலிய பொதுவான ஏற்படும்
தவறுகளை அலசி அதற்கேற்றாற் போல் சொல் திருத்தி இருப்பது நலம் பயப்பதாய்
அமையும்.
மேலும் தாங்கள் கூறியிுருப்பது போல் மெய் எழுத்துக்களுடன் சொற்கள் துவங்காது
போன்ற விதிமுறைகளையும் கருத்தில் கொண்டு இதற்கான செயற் திட்டத்தினை
உருவாக்கலாம்.
இது குறித்து பங்களூர் சென்ற போது சில நிமிடங்கள் முகுந்தண்ணாவுடன்
கலந்தாலோசிக்க நேரிட்டது. நாம் மேற்கூரிய விஷயங்களை aspell சொல் திருத்தி
கருத்தில் எடுத்துக் கொள்கிறதா என்பதை aspell அறிந்தவர்களிமிருந்து அறிய
விழைகின்றோம்.
நன்றி.
On 2/11/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> http://mauran.blogspot.com/2007/02/blog-post.html
>
> --
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070217/ec96dd50/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list