[உபுண்டு_தமிழ்]கேபாபெலில் scim உள்ளிடல் பற்றி {Was: Re: feisty problem}
K. Sethu
skhome at gmail.com
Mon Apr 23 06:12:00 BST 2007
நண்பர் திவே கேபாபெலில் scim-tables முறைமை phonetic வி.ப மூலம் தமிழ் உள்ளிடல்
முடியாமல் இருப்பதைச் சில மாதங்களுக்கு முன்பிருந்து சுட்டிக் காட்டி வருகிறார் .
நான் உபுண்டு எட்ஜி (குனோம், கேடியீ ஆகிய இரு சூழல்களிலும்), பைஸ்டி (குனோம்) மற்றும்
டெபியன் - எட்ச் (குனோம்) ஆகியவற்றில் கேபாபெலில் தமிழ் உள்ளிடல் முயற்சித்துள்ளேன்.
மூன்றிலும் இந்த scim-tables : phonetic தவறாக உள்ளிடுகிறது.
ஆனால் scim-tables இன் மற்றைய தமிழ் விசைப்பலகையான inscript மற்றும் scim
-m17n இன் அனைத்து வி. ப. களும் பாவித்து கேபாபெலில் உள்ளிட முடிகிறது. அதற்கு
scim அமைப்பில் (scim-setup) pre-edit ஐ உள்ளிணைக்காமல் இயக்க வேண்டும்.
சில அடிப்படை தேவைகள், அமைப்பில் செய்ய வேண்டியவைகள், tables: phonetic முறையில்
என்ன தவறு ஏற்படுகிறது, scim இன் ஏனைய முறைகள், xkb முறைகள் எல்லாம் எவ்வாறு
இயங்குகின்றன - இவையெல்லாம் பற்றிய எனது அவதானிப்புக்கள், கருத்துக்கள் பின்வருமாறு:
1. கேபாபெல் உட்பட்ட எல்லா qt சார் மென்பொருட்களுக்கும் scim மூலம் உள்ளிட உபுண்டுகளில்
scim-qtimm நிறுவுவது அத்தியாவசியம் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால்
டெபியன்-எட்சில் இந்த scim-qtimm repos எதிலும் காணப்படவில்லை. ஆயினும் qt சார்
மென்பொருட்களில் தமிழ் உள்ளிடல் உபுண்டுகளில் போலவே நடக்கின்றன - குறிப்பாக கேபாபெலில்
உபுண்டுவில் போலவே பிரச்சினைகள். டெபியனில் scim க்கு qt support வேறு விதமாக
கொடுக்கப்படுகிறதோ? (டெபியன்-எட்ச் நான் பாவிக்கும் முதல் டெபியன் - ஒரு வாரம் முன் இருந்து)
2. scim இலும் skim இலும் உள்ளிடுகையில் pre-edit என்று ஒன்றுள்ளதல்லவா? உதாரணமாக
scim-setup இல் FrontEnd ->Global Setup என்பதில் ஒரு தேர்வு இருக்கும்
இவ்வாறு: "Embed Preedit String into client window". முன்னிருப்பாக (by
default) இது சரி எனத் தேர்வு செய்யப்பட்டிருக்கும். அது pre-edit யை நாம் scim
மூலம் உள்ளிடும் சாரளத்தினுள் அடக்கி (embedded) வைத்திருப்பது. மாறாக அத் தேர்வை நாம்
நீக்கினால் pre-edit ஒரு தனி பெட்டகமாகத் தெரியும். (non embedded cage).
pre-edit embedded ஆக இருக்கையில் உள்ளிடுகைகளில் இன்னமும் நிறைவேற்றப்பட்டாத (yet
to be committed) உள்ளீடுகள் கீழ் கோடிடப்பட்டுத் தெரியும் (they appear
underlined). மாற்றான non-embedded தேர்வில் இன்னமும் நிறைவேறாதவை அந்த pre-edit
பெட்டகத்தில் இருக்கும்.
இவ் விரண்டு முறைகளில் pre-edit இல் உள்ள வித்தியாசத்தை இணத்திருக்கும் ss1.png என்ற
கோப்பில் பார்க்கலாம். இரண்டும் "எழுத்தெல்லாம்" என்பதில் அதில் "ல்" வரை உள்ளிட்டு "லா"
உள்ளிட்டுக்கொண்டிருக்கையில் "ல்" ஆனது "ல" வாக மாறிய பின் இன்னமும் கால் வர (அதாவது
உள்ளிடும் ஆவரங்கால் வி.பாவில் இன்னுமொரு "a" அடிக்க வேண்டிய) தருணத்தில் எடுத்த படங்களே.
"ல்லா" என்பவை முற்றுப்பெறுகையிலேயே அவ்விரு எழுத்துக்களும் நிறைவுபெறுகின்றன
(ஆங்கிலத்தில் getting committed என்பார்கள் ).
இணைக்கப்பட்ட படத்திலுள்ள gedit போல OOo, Kedit என பல செயலிகளில் இரு முறைகளிலும்
நாம் பாவிக்க முடிகிறது பிரச்சினைகள் இல்லாமல். ஆகா அத்தகைய செயலிகளில் நான்
embedded pre-edit தான் பாவிப்பேன் - ஏனெனில் சரளமாக உள்ளேறுவது போல்லுள்ளதால்.
இன்னமும் commit ஆகாத உள்ளிடப்பட்டவகள் கீழ் கோட்டுடன் தெரியும்.
ஆனால் கேபாபெலில் உள்ள பிரச்சினை என்னவெனில் embedded pre-edit அவ் வண்ணம்
இயங்காமையே. இன்னமும் commit ஆகா உள்ளீடுகள் (சாதரணமாக ஒன்று முதல் இரண்டு எழுத்துக்கள்
) கண்ணுக்குத் தென்படாமல் மறைந்து விடுகின்றன. ஆக pre-edit யை embedded ஆக வைத்து
கேபாபெல் உள்ளிடுவது செயல் முறைக்கு சரி வராது. கடைசியாக உள்ளிட்ட 1 -2 எழுத்துக்கள்
தெரியாவிடில் நாம் தப்பாக உள்ளிடுவதற்கு சாத்தியங்கள் கூடுகின்றது. ஆக மாற்றான
அமைப்பான non-embedded pre-edit தான் பாவிக்க வேண்டியுள்ளது - எல்லா scim-tables
மற்றும் scim-m17n முறைமைகளுக்கு. அதாவது பின்வரும் tables, m17n பற்றிய
அவதானிப்புக்கள் யாவும் அவ்வண்ணம் non-embedded pre-edit பாவித்த போதே.
3. அவ்வண்ணம் பாவிக்கையில் scim-tables இன் phonetic (ஷப்தலி) முறையில் உள்ளிடுகையில்
பல தவறுகளை ஏற்படுத்துகிறது. உதரணமாக "அம்மா" என்பது "அமா" என்று வருகிறது.
அதாவது மெய்யின் பின் அதன் அகர மெய் வருகையில் (க்க, ப்ப ... போன்றவைகளில்) scim
மெய்யை சாப்பிட்டு விடுகிறது!
4. scim-tables இன் மற்றைய வி.ப. வான inscript பாவிக்கையில் மேலே 3 இல் கூறிய இப்
பிரச்சினை இல்லை.
inscript முறையில் ஒரு விசைக்கு ஒரு எழுத்துருதான். phonetic முறையில் போல ஒரு
உயிருக்கும் அதன் உயிர் ஒலிகும் (glyph) ஒரே விசையல்லாமல் உள்ளது. மேலும்
நெடில்களுக்கு phonetic முறையில் நாம் ஒரே விசையை அடுத்தடுத்து அடிக்கிறோம். (a =
அ , aa =ஆ ). inscript இல் அப்படியல்ல. scim-tables - phonetic வி.ப. இயங்காமை,
ஆனால் அதே tables முறையில் inscript இயங்குதல் இவ்வித்தியாசங்கள் காரணமாக இருக்கலாம்.
5. ஆனால் scim-m17n எல்லா வி. ப. க்களும் (itrans, phonetic, avarangal,
tamil99, inscript) சரியாக இயங்குகின்றன. அவற்றிற்கிடையே ஆன வித்தியாசங்கள் (மேலே
4 இல் நான் கூறுவது உட்பட) பல இருப்பினும் அனைத்து m17n வி.ப க்களும் சரியாக
இயங்குவதிலிருந்து tables யை விட m17n சிறந்த முறை என அவ்வப்போது நான் வாசித்துள்ள
கருத்துக்கள் சரி எனத் தோன்றுகிறது.
இம்மடலுடன் இணைபான ss2.png கோப்பில் பார்கலாம் நான் scim-m17n -ta-avaragkal
பாவித்து கேபாபெலில் உள்ளிடுவதை.
6. scim இல் ஏனைய மாற்று முறைகள் என்ன எனப் பார்ப்போம்
scim க்கு பின்முகமாக இயக்க 5 வகை சாத்தியங்கள் உள்ளன:
6.i - Specific Language IM Module - தமிழுக்கு இது ஏற்படுத்தவில்லை. பல CJK
மொழிகளுக்கும், சிங்களத்திற்கும் (scim-sinhala) உண்டு. scim-sinhala பாவித்துப்
பார்த்தேன் (எட்ஜியில்). இத்தகைய முறைக்கு pre-edit என்பது இல்லை. ஆயினும் ஒரு
பிரச்சினையும் இல்லை. தமிழிற்கும் இத்தகைய நேரடி முறை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
6.ii - scim க்கு நேரடி அல்லாத multi-lingual பின்முகங்கள் ஏனைய நான்கு வகைகள் :
tables, m17n, uim மற்றும் kmfl என்பன அவைகள். இவற்றில் tables, m17n முறைகள்
கேபாபெலில் எவ்வாறு என்பதைப் பற்றி மேலே முறையே 4, 5 ஆகியவற்றில் பார்க்கவும்
uim, scim க்கு பின்முகமாக பாவிப்பதென்பது scim-uim நிறுவியபின் uim
கொடுக்கக்கூடிய வி.ப. க்களை scim முன்முகம் மூலம் பாவிப்பது. ஆனால் uim இல் நேரடியாக
தமிழ் வி.ப. இல்லை. மேலும் uim உடன் பாவிக்கப்படக் கூடிய் பின்முகங்களில் m17n மட்டும்
தமிழ் வி.ப. கொண்டுள்ளது. ஆக இம் முறை பாவிப்பதென்பது scim-uim, uim-m17n என்பன
நிறுவியிருக்கையிலேயே. அப்படியும் கேபாபலில் உள்ளிட முடிகிறது. ஆனால் scim-m17n
பாவனைக்கு அப்பாலாக புதிதாக நமக்கு ஒன்றும் இதில் இல்லை. எனவே m17n யை நேரடியாக
scim உடன் பாவிக்க முடிவதால் இம் முறை தேவை இல்லை.
scim-kmfl முறையில் எட்ஜியில் எனது பரீட்சார்த்த kmfl க்கு ஆக்கிய இரு phonetic
பலகைகளை முயற்சித்தேன். kmfl க்கு pre-edit கிடையாது - தேவையும் இல்லை. உள்ளிடும்
போதே அவைகள் மறையாமல் தென்படுகின்றன. ஆனால் எனது பரீட்சார்த்த phonetic வி.ப க்கள்
மூலம் கேபாபெலில் உள்ளிடுகையில் பல தவறுகள் ஏற்படுகின்றன (gedit, OOo போன்றவககளில்
அப்பிரச்சினைகள் இல்லை). நான் kmfl நிரலாக்கல் மொழியை முழுமையாக கற்று அறியவில்லை.
அதில் சிக்கல்லற்ற அடிப்படை அம்சங்களை மற்றுமே இதுவரை பாவிக்கத் தெரிந்துள்ளேன்.
மேலதிகமாக பல கருவிகள் அம் மொழியில் உள்ளன. எ-கலப்பையை ஆக்கிய நணபர் முகுந்தராஜ்
தலமையிலான தமிழா குழுவினர் எ-கலப்பைக்கான விசைப் பலகைகளின் மூலங்களை (.kmx
கோப்புக்களை) திறந்த மென்பொருட்களாக வெளியிட்டால் நாம் அவற்றை kmfl இல் பாவித்துப்
பார்க்க முடியும். !
7. scim அல்லாத ஏனைய முறைகள்
7.i xkb முறைகள். xkb யில் ஒருங்குறிக்கான Tamil (இது இன்ஸ்கிரிப்ட்) மற்றும் Tamil
Unicode (இது புதிய தட்டச்சு அடிப்படையானது) இரண்டும் கேபாபெலுக்கு தமிழ்
உள்ளிடுவதில் பிரச்சனைகள் இல்லாமல் இயங்குகின்றன. xkb க்கு pre-edit என்பது இல்லை,
தேவையுமில்லை!
7.ii UIM - இது scim உடன் அல்லாமல், _uim யை நேரடியாக முன் முகமாகவும்
தமிழிறிற்கு m17n ஐ அதன் பின் முகமாகவும் பாவித்தல். உள்ள்டிஅல் நடைபெறுகிறது ஆனால்
uim இல் pre-edit என்று ஒன்று இல்லை போல தெரிகிறது. அது தேவைப் படுகிறது. ஏனெனில்
உள்ளீடப்பட்டவைகள் committ ஆகும் வரை மறைகின்றன.
7.iii gtk3-im-tamil - கேபாபெல் qt சார் என்பதால் இம்முறை பாவிக்க இயலாது.
ஆக சுருக்கமாக கூறுவதானால் உபுண்டு - எட்ஜி, பைஸ்டி மற்றும் டெபியன்-எட்ச்
ஆகியவற்றில் கேபாபெலில் தமிழில் உள்ளிட பாவிக்கக் கூடிய முறைகள் :
scim-tables: inscript மட்டும்
scim-m17n : அதில் எல்லா தமிழ் விசைப் பலகைகளும்
scim-uim and uim-m17n - பாவிக்க முடியும் - ஆனால் இந்த சுற்றி வளத்த முறை தேவையில்லை
xkb - ஒருங்குறிகான இரு விசைப்பலகைகளும் பாவிக்கலாம்
_
~சேது
On 04/20/2007 09:27 PM, Tirumurti Vasudevan wrote:
> installed feisty 64 bit version
> problem in changing the scim input in kbabel
> the latests updates in edgy broke something and the kbabel closes as
> soon as it opens.
> so i installed feisty
> i see that i can change the scim kbd to phonetic tamil and input in
> gedit but not kbabel.
>
> tv
>
>
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: ss1.png
Type: image/png
Size: 69376 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070423/5e958972/attachment-0001.png
More information about the Ubuntu-l10n-tam
mailing list