[உபுண்டு_தமிழ்]ஃபைஸ்டி குறுவட்டுகள்...

K. Sethu skhome at gmail.com
Mon Apr 23 04:16:46 BST 2007


On 04/23/2007 07:36 AM, ஆமாச்சு wrote:
> மயூரன்/ சேதுண்ணா,
>
> கடந்த முறை அனுப்ப விண்ணப்பித்தது இம்முறையும் இலங்கைக்கும் குறுவட்டுகள் அனுப்ப 
> விண்ணப்பிக்கட்டுமா?
>
> யாருடைய முகவரி? முகவரியில் மாற்றம்  இருந்தால் அறியத் தரவும்.
>
> நன்றி...
>
> -- 
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
> https://wiki.ubuntu.com/sriramadas
>
மயூரன் கடந்த முறை அவற்றை சுங்கத்திலிருந்து வெளி கொணர்ந்தீர்களா? கேட்க மறந்து 
விட்டது.  மேலும் இம்முறை TLC பெயரில் வரவழைக்க ஏதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

ஆமாச்சு தாங்கள் விண்ணப்பிப்பது http://shipit.ubuntu.com மூலம் தானே? அப்படியானல் 
இங்கிருந்து நாங்களே நேரடியாக விண்ணப்பிக்கலாமே (launchpad பயனர் கணக்கைப் பாவித்து) 
? நாமே விண்ணப்பித்து வரவழைத்தால் சுங்கத்தில் என்னத்தை வரவழைத்தோம் என்பதை எடுத்துக் கூறி 
நியாயமான தீர்வையை அவர்கள் போட வைக்க ஏதுவாக இருக்கும் என நினக்கிறேன்.

அத்தளத்தில் (shipit) பார்க்கையில் தெரிவது என்னவெனில் அடிப்படையாக 3 cd க்கள் வரை 
பெற்றுக்கொள்ள 6 - 10 வாரங்கள் ஆகு,ம்.  ஆனால் 3 ஐ விட கூடுதலாக எவ்வளவு கேட்டாலும் 
விண்ணப்பித்த பின் 10 வாரங்கள் கழித்தே வரக் கூடும்.

~சேது





More information about the Ubuntu-l10n-tam mailing list