[உபுண்டு_தமிழ்]டெபியன் இன்ஸ்டாலர்...

K. Sethu skhome at gmail.com
Sun Apr 22 18:52:23 BST 2007


On 04/20/2007 12:05 AM, ஆமாச்சு wrote:
> [..]
> உபுண்டு நிறுவ டெபியன் இன்ஸ்டாலர்  பயன்படுத்தப் படுவது நாம் அறிந்ததே...
>
> ஆனால்... எதிலிருந்து இது துவக்கம்?
>
> நிகழ் வட்டினை  துவக்கும் போது வரும் Start Ubuntu.. வா  அல்லது நிகழ் வட்டினை 
> துவக்கி உள்ளே இருக்கும் Install பொத்தானைச் சொடுக்கியதன் பிறகு வருவதா?
[..]


நிகழ்வட்டு இயக்கம் என்பது இயங்கு தளத்தின் சில அடிப்படை அமைப்புக்களை RAM இல் ஒரு 
பகுதியில் நிறுவி (வன் தட்டில் அவற்றை நிறுவுவது போல)  மிகுதியாக பெறும்பானமையான 
மென்பொருட்களை குறுந்தட்டிலேயே வைத்திருந்து தேவைபடுகையில் RAM க்கு கொணர்வது. அதனால் 
நிகழ்வட்டு இயங்கு தளம் RAMDisk இல் நிறுவப்படுகிறது எனக் கூறப்படுகின்றது. 

எனது ஊகங்கள் :

நிகழ்வட்டை துவக்கியபின் பயனருக்கு மேசைத்தளம் பாவிக்கக் கூடிய தருணம் வரும் வரையான 
இடைவெளியில் RamDisk யில் தளத்தை நிறுவுவதும் கூட Debian Installer  ஆகத்தான்  
இருக்கலாம். பின் வன்தட்டில்  நிறுவ நாம்  Install பொத்தானை அமுக்குகையிலும் Debian 
Installer தான் நிறுவுதலைச் செய்கிறது.

RamDisk இல் நிறுவுகையில் வன்தட்டில் நிறுவுகையிற் போல பயனரிடம் விருப்பத் தகவல்கள் 
கேட்கப்படுதில்லை என்பது வேறுபாடுகளில் நாம் இலகுவாக அவதானிக்கக் கூடியது.

எனது ஊகங்கள் சரியா, தவறா ?

~சேது




More information about the Ubuntu-l10n-tam mailing list