[உபுண்டு_தமிழ்][அறிவிப்பு] கஸ்டி கிப்பன்!
ஆமாச்சு
amachu at ubuntu.com
Tue Apr 17 18:24:49 BST 2007
On 4/16/07, K. Sethu <skhome at gmail.com> wrote:
>
> அது : Gutsy - "கட்சி" (- கஸ்டி அல்ல )
> "க" வின் மாற்றொலிகளுள் "ga" ஒலியம் அடங்கும். அதே போல "ச" வின்
> மாற்றொலிகளில்
> "sa" உம் உள்ளது. எனவே "கட்சி" என்பதை "gatsi" என உச்சரித்தல் தமிழ்
> மரபிலக்கணங்களுக்கு ஏற்பவே.
>
Gibbon: "கிபன்" என எழுதலாம் . "http://www.thefreedictionary.com/gibbon இல்
> உச்சரிப்பைக் கேட்டுப் பாருங்கள் ""bb" என்பதில் ஒரு "b" silent ஆகிறது.
>
> (Breezy Badger, Dapper Drake, Edgy Eft, Feisty Fawn, Gutsy Gibbon
> .... Hmmm - between Breezy and Dapper they didn't have some thing
> starting with "C". )
ஆம். ஆனா, அரசியல் கட்சி யில்லன்னு விளக்கவே நேரமாயிடுமோன்னு தோணுது. கட்ஸி
ன்னு சொல்லலாம்.
6 மாதங்களுக்கு ஒரு முறை புதிய வெளியீடு, அவைக்கு 18 மாதங்கள் (அல்லது LTS
> ஆனால்
> 36 மாதங்கள்) சப்போர்ட் என்ற அவர்களது திட்டம் அவ்வளவு நல்லதாக எனக்குத்
> தெரியவில்லை.
> ஏனென்றால் பொதிகளை உருவாக்கி பராமரிக்கும் சில மூன்றாம் தரப்பினர் புதிய
> வெளியீடு
> வந்தவுடன் முன்னைய ஆனால் இன்னமும் வாழ்நாட்கள் உள்ள வெளியீடுகளை மறந்து /
> கைவிட்டு
> விடுகிறார்கள்.
ஆறு மாதம் குறுகிய கால அளவு என்பதை அவ்வப்போது யோசித்ததுண்டு. ஆனால் ரெண்டு
வருஷத்துக்கு போக வேண்டாம். வருடா வருடம் வெளியிடலாம்.
Main repo பொதிகளுக்கு Canonical தமது கடமைகளில் தவறாது தேவைப்படும் updates
> களைக் கொடுக்கக் கூடும். ஆனால் universe repo வில் பல மூன்றாம் தரப்பினர்
> அவ்வாறு செய்வார்களா? - செய்ய வேண்டும் என நிர்ப்பந்தங்கள் உள்ளனவா?
சரியான விவரம் இல்லை.
டெபியன் முறையைப் பாருங்கள். 21 மாதங்கள் நிலைத்துவம் அடையா மேம்படுத்தல் /
> பரிசோதனை
> வெளியீடாக இருந்த டெபியன்-எட்ச் சில தினங்கள் முன்னரே நிறைவடைந்த ஒன்றாக
> வெளியீட்டார்கள் . அடுத்த வெளியீடு வர 2 வருடங்கள் ஆகும்.
>
எனது கருத்து என்னவெனில் உபுண்டு வெளியீடுகள் LTS - 36 months support ஆக
> மட்டும்
> வெளியிட வேண்டும். எல்லா வித updates களும் தொடச்சியாக இணைய மூலம் இப்போது
> போல
> வரலாம். நடுவில் (அதாவது 18 மாதங்கள் பின்) ஒரு பெரிய patches cd ஆக அவர்கள்
> வெளியிடலாம். (விண்டோ காரர்கள் sp1, sp2 என்று போடுவார்களே அதே போல)
ஆனா டெபியனுக்கு உபுண்டு வின் Bug 1 கிடையாதே. ;-) அதனால உபுண்டு
வெளியீட்டுக்கு இடையே இன்னும் குறைவான இடைவெளியிருக்கணும்னு நினைக்கிறேன். ஒரு
வருட இடைவெளியில் கொடுக்கலாம்.
https://bugs.launchpad.net/ubuntu/+bug/1
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070417/9ef6ca23/attachment-0001.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list