[உபுண்டு_தமிழ்][அறிவிப்பு] கஸ்டி கிப்பன்!

amachu at ubuntu.com amachu at ubuntu.com
Mon Apr 16 03:20:39 BST 2007


தங்களுடைய இரண்டு மடல்களுக்கும் இன்றிரவு பதில் தருகிறேன்.

நன்றி.

On 4/16/07, K. Sethu <skhome at gmail.com> wrote:
> On 04/15/2007 10:36 PM, ஆமாச்சு wrote:
> > வணக்கம்,
> >
> > பைஸ்டிக்கு அடுத்தாப்ல கஸ்டி கிப்பன்!
> >
> >
> https://lists.ubuntu.com/archives/ubuntu-devel-announce/2007-April/000276.html
> >
> >
> அது : Gutsy - "கட்சி"  (- கஸ்டி அல்ல )
> "க"  வின் மாற்றொலிகளுள் "ga" ஒலியம் அடங்கும். அதே போல "ச" வின் மாற்றொலிகளில்
>
> "sa" உம் உள்ளது. எனவே "கட்சி" என்பதை "gatsi" என உச்சரித்தல் தமிழ்
> மரபிலக்கணங்களுக்கு ஏற்பவே.
>
> Gibbon: "கிபன்" என எழுதலாம் .  "http://www.thefreedictionary.com/gibbon இல்
> உச்சரிப்பைக் கேட்டுப் பாருங்கள் ""bb" என்பதில் ஒரு "b" silent ஆகிறது.
>
> (Breezy Badger, Dapper Drake, Edgy Eft, Feisty Fawn, Gutsy Gibbon
> ....    Hmmm - between  Breezy and  Dapper they didn't have some thing
> starting with "C". )
>
> 6 மாதங்களுக்கு ஒரு முறை புதிய வெளியீடு, அவைக்கு 18 மாதங்கள்  (அல்லது LTS
> ஆனால்
> 36 மாதங்கள்)  சப்போர்ட் என்ற அவர்களது  திட்டம் அவ்வளவு நல்லதாக எனக்குத்
> தெரியவில்லை.
> ஏனென்றால்  பொதிகளை  உருவாக்கி பராமரிக்கும் சில மூன்றாம் தரப்பினர் புதிய
> வெளியீடு
> வந்தவுடன் முன்னைய ஆனால் இன்னமும் வாழ்நாட்கள் உள்ள வெளியீடுகளை மறந்து /
> கைவிட்டு
> விடுகிறார்கள்.
>
> உதாரணமாக போன வருடம்  வந்த Dapper ஒரு LTS ஆனதால் அதற்கு Canonical இன் ஆதரவு
> இன்னமும் 24 மாதங்களுக்கு இருக்கும்.  அந்த வெளியீடுக்கு m17n-db, m17n-lib
> பொதிகளை
> இருமமாக்கி ஏற்றியவர்கள் அவை இரண்டும் ஒன்றுக்கு மற்றது பொருந்தாத
> வெளியீடுகளைப் பயன்
> படுத்தியதால்  அவர்கள் ஏற்றிய m17n  அமைப்பு  பாவிக்க முடியாமல் பலரும் இது
> என்ன வழு
> எப்படி தீர்க்க  என. கேள்விகள் எழுப்பினர் சென்ற வருடம் .  உட்படுத்திய
> m17n-lib க்கு
> ஒவ்வாத அதை விட பழைய m17-db பயன்படுத்தியிருக்கிறார்கள் அதனாலேயே அப் பிரச்சினை
> என்பதை m17n.org ஐச் சேர்ந்த ஒரு வல்லுனர் அவர்களது மடலாற்ற குழுமத்தில்
> சுட்டிக்காட்டினார் .  ஆனால் பொதிகளை ஏற்றிப் பரமரிப்போர் Dapper க்குக்
> bug-fixing
> update ஆக்கவில்லை. இப்போதும் Dapper இல் m17n பாவிக்க பயனர்கள் தான் tar ball
> இலிருந்து compile & install செய்ய வேண்டியுள்ளது. எட்ஜியிலும், பைஸ்டியிலும்
> அவ்
> வழு தவிர்க்கப்பட்டுள்ளன .
>
> Main repo பொதிகளுக்கு Canonical தமது கடமைகளில் தவறாது தேவைப்படும் updates
> களைக் கொடுக்கக் கூடும். ஆனால் universe repo வில்  பல மூன்றாம் தரப்பினர்
> அவ்வாறு
> செய்வார்களா?  - செய்ய வேண்டும் என நிர்ப்பந்தங்கள் உள்ளனவா? ஒரே நேரத்தில் பல
> வெளியீடுகள்
> இருக்கும் நிலையில் முன்னர் வந்தவைகள் மீது அவதானங்கள் (focus) குறைந்து
> போகிறது என
> நினைக்கிறேன்.
>
> மேலும் உதவிக் கையேடுகள் எழுதும் ஆர்வலர்கள் அன்மைக்கால வெளியீட்டுக்கு
> மட்டுமல்லாது
> அதற்கு முன்னைய 2 -3  வெளியீடுகளில் எப்படி  என்பதையும் எழுத வேண்டியுள்ளது.
>
> டெபியன் முறையைப் பாருங்கள்.  21 மாதங்கள்  நிலைத்துவம் அடையா மேம்படுத்தல் /
> பரிசோதனை
> வெளியீடாக  இருந்த  டெபியன்-எட்ச்  சில தினங்கள் முன்னரே நிறைவடைந்த ஒன்றாக
> வெளியீட்டார்கள் .  அடுத்த வெளியீடு வர 2 வருடங்கள் ஆகும்.
>
> எனது கருத்து என்னவெனில் உபுண்டு வெளியீடுகள் LTS - 36 months support ஆக
> மட்டும்
> வெளியிட வேண்டும். எல்லா வித updates களும் தொடச்சியாக இணைய மூலம் இப்போது போல
> வரலாம். நடுவில் (அதாவது 18 மாதங்கள் பின்) ஒரு பெரிய patches cd ஆக அவர்கள்
> வெளியிடலாம். (விண்டோ காரர்கள் sp1, sp2 என்று போடுவார்களே அதே போல)
>
> நண்பர்களே தங்கள் கருத்துக்கள் அறிய விரும்புகிறேன்
>
> ~சேது
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-l10n-tam mailing list