[உபுண்டு_தமிழ்]கேயுபுண்டு நிறுவும் முறை..

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue Apr 17 18:06:43 BST 2007


> "கேயுபுண்டு" என்பதுதான்  சரியான  உச்சரிப்பா?  (குபுண்டு  இல்லையோ?)

குபுண்டு எனத் தான் பயன்படுத்தி வந்தோம். கேடீயீ எனச் சொல்லுவதால் கேயுபுண்டு
விரைவில் எடுபடும் என்பதால் அவ்வாறு மாற்றி யுள்ளோம்.

> (நிகழ்வட்டு இயக்கத்தில் உள்ளிடலை ஒரு கோப்பில் உள்ளிட்டு copy and paste
> செய்யலாம் தானே?)

நகலெடுத்து ஒட்ட முடியும்.

> உபுண்டு (அல்லது கேயுபுண்டு அல்லது எக்சுபுண்டு ...) நிறுவலை ஒருங்குறி
அல்லாத
> மற்றைய குறியீடு முறைகளில் ஆன language locale உடன்  நிறுவ முடியுமா?

தெரியவில்லை.

> படி 4 தேவை யில்லை. default ஆங்லிலத்திலே நிறுவச் சொல்லாம்.

அப்படிதான் செய்து வந்தோம். சரி தமிழாக்கம் செய்வதன் தரமும்,  பிழைகளும் அறிய
வந்தால் தானே அடுத்த வெளியீடுகளில் சரி செய்ய முடியும் என்றே முழுவதும் தமிழில்
நிறுவி பயன்படுத்தத் துவங்கியுள்ளோம். இப்படி நாலு பேராவது செஞ்சாதானே குறைகள்
குறைஞ்சபட்சம் தெரியவாவது வரும்.

Server க்கு ஒரு இடத்துல சேவகன் ன்னும் இன்னொரு இடத்துல புரவன் ன்னும் இப்படி
பல விஷயங்களை  பார்க்க நேரிட்டது.

> இவற்றிற்கெல்லாம் அப்பால் ஒரு கேள்வி - நிறுவும் போது தமிழில் பயனர் பெயரை
உள்ளிட்டால் ஏற்றுக்கொள்கிறதா? நான் செய்து பார்க்கவில்லை இது வரை.

நானும் செய்து பார்க்கவில்லை.

> Debian-Etch, SuSe10.2, Fedora Core 6, Mandriva 2007 என்பவைகளில் sans
> எழுத்துருக்கள் l10n செய்யப்பட்ட இடங்களில் சரியாகவே உருவடைகின்றன- ஆக
> இது உபுண்டுவில் மட்டும் உள்ள வழுவாகிறது. நமது உபுண்டு தமிழ் குழுமம்தான்
தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும்

இதற்கான வழு பதிவு செய்யப்பட்டுள்ளது முந்தைய மடலில் சுட்டியிருந்தோம்.

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070417/7d31fd50/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list