[உபுண்டு_தமிழ்][அறிவிப்பு] கஸ்டி கிப்பன்!

K. Sethu skhome at gmail.com
Sun Apr 15 21:40:18 BST 2007


On 04/15/2007 10:36 PM, ஆமாச்சு wrote:
> வணக்கம்,
>
> பைஸ்டிக்கு அடுத்தாப்ல கஸ்டி கிப்பன்!
>
> https://lists.ubuntu.com/archives/ubuntu-devel-announce/2007-April/000276.html
>
>   
அது : Gutsy - "கட்சி"  (- கஸ்டி அல்ல )
"க"  வின் மாற்றொலிகளுள் "ga" ஒலியம் அடங்கும். அதே போல "ச" வின் மாற்றொலிகளில்  
"sa" உம் உள்ளது. எனவே "கட்சி" என்பதை "gatsi" என உச்சரித்தல் தமிழ் 
மரபிலக்கணங்களுக்கு ஏற்பவே.

Gibbon: "கிபன்" என எழுதலாம் .  "http://www.thefreedictionary.com/gibbon இல் 
உச்சரிப்பைக் கேட்டுப் பாருங்கள் ""bb" என்பதில் ஒரு "b" silent ஆகிறது.

(Breezy Badger, Dapper Drake, Edgy Eft, Feisty Fawn, Gutsy Gibbon 
....    Hmmm - between  Breezy and  Dapper they didn't have some thing 
starting with "C". )

6 மாதங்களுக்கு ஒரு முறை புதிய வெளியீடு, அவைக்கு 18 மாதங்கள்  (அல்லது LTS ஆனால் 
36 மாதங்கள்)  சப்போர்ட் என்ற அவர்களது  திட்டம் அவ்வளவு நல்லதாக எனக்குத் தெரியவில்லை.  
ஏனென்றால்  பொதிகளை  உருவாக்கி பராமரிக்கும் சில மூன்றாம் தரப்பினர் புதிய வெளியீடு 
வந்தவுடன் முன்னைய ஆனால் இன்னமும் வாழ்நாட்கள் உள்ள வெளியீடுகளை மறந்து / கைவிட்டு 
விடுகிறார்கள்.

உதாரணமாக போன வருடம்  வந்த Dapper ஒரு LTS ஆனதால் அதற்கு Canonical இன் ஆதரவு 
இன்னமும் 24 மாதங்களுக்கு இருக்கும்.  அந்த வெளியீடுக்கு m17n-db, m17n-lib பொதிகளை 
இருமமாக்கி ஏற்றியவர்கள் அவை இரண்டும் ஒன்றுக்கு மற்றது பொருந்தாத வெளியீடுகளைப் பயன் 
படுத்தியதால்  அவர்கள் ஏற்றிய m17n  அமைப்பு  பாவிக்க முடியாமல் பலரும் இது என்ன வழு  
எப்படி தீர்க்க  என. கேள்விகள் எழுப்பினர் சென்ற வருடம் .  உட்படுத்திய   m17n-lib க்கு 
ஒவ்வாத அதை விட பழைய m17-db பயன்படுத்தியிருக்கிறார்கள் அதனாலேயே அப் பிரச்சினை 
என்பதை m17n.org ஐச் சேர்ந்த ஒரு வல்லுனர் அவர்களது மடலாற்ற குழுமத்தில் 
சுட்டிக்காட்டினார் .  ஆனால் பொதிகளை ஏற்றிப் பரமரிப்போர் Dapper க்குக் bug-fixing 
update ஆக்கவில்லை. இப்போதும் Dapper இல் m17n பாவிக்க பயனர்கள் தான் tar ball 
இலிருந்து compile & install செய்ய வேண்டியுள்ளது. எட்ஜியிலும், பைஸ்டியிலும் அவ் 
வழு தவிர்க்கப்பட்டுள்ளன .

Main repo பொதிகளுக்கு Canonical தமது கடமைகளில் தவறாது தேவைப்படும் updates 
களைக் கொடுக்கக் கூடும். ஆனால் universe repo வில்  பல மூன்றாம் தரப்பினர் அவ்வாறு 
செய்வார்களா?  - செய்ய வேண்டும் என நிர்ப்பந்தங்கள் உள்ளனவா? ஒரே நேரத்தில் பல வெளியீடுகள் 
இருக்கும் நிலையில் முன்னர் வந்தவைகள் மீது அவதானங்கள் (focus) குறைந்து போகிறது என 
நினைக்கிறேன்.

மேலும் உதவிக் கையேடுகள் எழுதும் ஆர்வலர்கள் அன்மைக்கால வெளியீட்டுக்கு மட்டுமல்லாது 
அதற்கு முன்னைய 2 -3  வெளியீடுகளில் எப்படி  என்பதையும் எழுத வேண்டியுள்ளது.

டெபியன் முறையைப் பாருங்கள்.  21 மாதங்கள்  நிலைத்துவம் அடையா மேம்படுத்தல் / பரிசோதனை 
வெளியீடாக  இருந்த  டெபியன்-எட்ச்  சில தினங்கள் முன்னரே நிறைவடைந்த ஒன்றாக 
வெளியீட்டார்கள் .  அடுத்த வெளியீடு வர 2 வருடங்கள் ஆகும்.

எனது கருத்து என்னவெனில் உபுண்டு வெளியீடுகள் LTS - 36 months support ஆக மட்டும் 
வெளியிட வேண்டும். எல்லா வித updates களும் தொடச்சியாக இணைய மூலம் இப்போது போல 
வரலாம். நடுவில் (அதாவது 18 மாதங்கள் பின்) ஒரு பெரிய patches cd ஆக அவர்கள் 
வெளியிடலாம். (விண்டோ காரர்கள் sp1, sp2 என்று போடுவார்களே அதே போல)

நண்பர்களே தங்கள் கருத்துக்கள் அறிய விரும்புகிறேன்

~சேது
 



More information about the Ubuntu-l10n-tam mailing list