[உபுண்டு_தமிழ்]கேயுபுண்டு நிறுவும் முறை..
K. Sethu
skhome at gmail.com
Sun Apr 15 15:58:14 BST 2007
ஆமாச்சு wrote:
> வணக்கம்..
>
> பார்க்க:
>
> http://ubuntuforums.org/showthread.php?p=2452451
> <http://ubuntuforums.org/showthread.php?p=2452451>
>
> http://ubuntuforums.org/showthread.php?t=408590
> <http://ubuntuforums.org/showthread.php?t=408590>
>
> --
யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
"கேயுபுண்டு" என்பதுதான் சரியான உச்சரிப்பா? (குபுண்டு இல்லையோ?)
தங்கள் நிறுவும் முறைகளில் படி 4 இல் விசைப்பலகைக்கு India - Unicode Tamil யை
தேர்வு செய்ய சொல்லுகிறீர்கள். இது ஒரு xkb - விசைப் பலகை. அநேகமான லினக்சு
வெளியீடுகளை நிறுவுகையில் ஆங்கிலத்துக்கு மாற்றாக தமிழ் போன்ற வேறு மொழிகளில் உள்ளிட
XKB முறை மட்டும்தான் பாவிக்க முடியும். ஏனெனில் scim, uim மற்றும் GTK-IM போன்ற
மாற்று முறைமைகளை இயங்கு தள நிறுவலை முடித்த பின்னரே நாம் செருக முடியும். ஆனால்
உபுண்டு வெளியீடுகளும் (மேலும் தற்போது Fedora Core, Madriva கூட) நிகழ் வட்டு
(live CD ) மூலம் நிறுவலாக்க முடிவதால் நிகழ் வட்டு இயக்கத்தில் (live cd session)
scim போன்ற வி.ப முறைமை ஒன்றின் மூலம் தமிழ்99 போன்ற ஏனைய வி. ப. க்களும் பாவிக்க
முடியும் (நிகழ்வட்டு இயக்கத்தில் உள்ளிடலை ஒரு கோப்பில் உள்ளிட்டு copy and paste
செய்யலாம் தானே?)
XKB முறையில் தமிழுக்கு மொத்தம் 4 வி.ப. க்கள் உள்ளன. நிறுவிய பின் அவைகளுக்கான
மூலக் குறியீடுகளை இந்த கோப்பில் பார்க்கலாம் : /usr/share/X11/xkb/symbols/in
(அதில் பல மொழிகளுக்கான xkb மூலக் குறியீடுகள் alphabatic order இல் உள்ளதால் -
தமிழ் வி.ப களுக்கு கீழே கடைசிக் கிட்டே பாருங்கோ).
அந்த 4 தமிழ் XKB வி. ப. முறைகள் ஆனவை : 1). Unicode Tamil 2). Tamil 3).
Tamil TAB Typewriter 4). Tamil TSCII Typewriter.
இவற்றில் முதலாவது - Unicode Tamil ஒருங்குறிக்காக புதிய தட்டச்சு முறை
அடிப்படையில் (ஆனால் ஒலியியல் பாங்கினையும் ஒரளவு உள்ளடக்கிய) வி.ப ஆகும். 2) Tamil
என்ற பெயரில் உள்ளது Inscript முறை - ஒருங்குறியில் இயங்கும் (ISCII இலும் அது
இயங்கும் என நினைக்கிறேன் ) . அடுத்த இரண்டும் முறையே TAB, TSCII குறியீடுகளுக்கான
புதிய தட்டச்சு அடிப்படையிலான வி.ப. க்கள்.
ta_IN என்ற locale க்கு நாலும் தெரிவு செய்யலாம். ta_LK என்ற இலங்கை தமிழ் locale
வரையறக்கு மேலுள்ளவற்றில் 1). Unicode Tamil மற்றும் 3). Tamil TAB
Typewriter ஆகிய இரண்டும் தேர்ந்தெடுக்கலாம் என்ற வகையிலும் அமைத்திருக்கிறார்கள்.
உபுண்டு (அல்லது கேயுபுண்டு அல்லது எக்சுபுண்டு ...) நிறுவலை ஒருங்குறி அல்லாத
மற்றைய குறியீடு முறைகளில் ஆன language locale உடன் நிறுவ முடியுமா? உதாரணமாக
முன்னைய RedHat /Fedora Core களில் TSCII க்கு support இருந்தன.
அது எவ்வாறாயினும், தங்கள் நிறுவல் முறையில் படி-4 இல் போல ஒருவர் உள்ளிடும்
விசைப்பலகையை default en_US அல்லாமல் Unicode Tamil வி. ப. வோ அல்லது
மற்றவைகளில் ஒன்றை தெரிவு செய்வார் எனின் அவரிடம் அவ் விசைப்பலகை இருக்க வேண்டும் -
அல்லது சாதாரண ஆங்கில பலகையில் தமிழிற்கான விசை எழுத்துக்களை அவற்றிற்கான
விசைகளில் ஒட்டி வைத்திருக்க வேண்டும். அல்லது எங்கெங்கு என்ன எழுத்துக்கள் என்பதை
மனப்பாடமாக்கி வைத்திருக்க வேண்டும். அதாவது இந்த வி.ப முறையை முதலிலேயே அறிந்து
அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலே அவ் வி.ப. வை பாவிக்க முடியும்.
இத்தகைய நிறுவுதலற்கான கையேடுகளால் பயன் பெறப் போவது அநேகமாக லினக்சுக்குப்
புதியவர்களாகவே இருப்பார்கள். நிறுவிய பின்னரே அப்படியானோர் தமிழ் விசைப் பலகைகள்
எவைகள் என்று கற்க முடியும் - பல குழப்பங்கள் அடைந்து தெளிவுகள் பெற சில காலங்கள்
தேவை. சுருக்கமாகச் சொல்வதானால் புதிய முயற்சியாளர்களுக்கு தமது விபரங்களையோ
பயனர் பெயரையோ தமிழிலேயே உள்ளிட இலகு முறைகள் இல்லை.
முதலில் நிறுவுதலின் போது ஆங்கிலத்தில் உள்ளிட்டு (தங்கள் படி 5 இல் போல) பின்னர்
தளத்தின் அமைப்புக்களை நன்கு அறிந்த பின் தமிழுக்கு மாற்றக் கூடியவைகளை (பயனர் பெயர்
போன்றவைகள்) நிறுவிய தளத்திலிருந்து மாற்றலாம் என்பது யாவரும் ஏற்றுக்
கொள்ளக்கூடியதானால் (அல்லது அவ்வண்ணமே யதார்த்தமான நடைமுறை என்பது ஏற்றுகொள்ளக்
கூடியதானால்) படி 4 தேவை யில்லை. default ஆங்லிலத்திலே நிறுவச் சொல்லாம்.
இவற்றிற்கெல்லாம் அப்பால் ஒரு கேள்வி - நிறுவும் போது தமிழில் பயனர் பெயரை உள்ளிட்டால்
ஏற்றுக்கொள்கிறதா? நான் செய்து பார்க்கவில்லை இது வரை. புது பயனர் கணக்குளை முதலில்
தமிழில் உருவாக்கி பார்த்த பின் இதைப் பற்றி எழுதுகிறேன்.
தாங்கள் எழுதியுள்ள எட்ஜிக்கும், தற்போதைய பைஸ்டி-பீடா விற்கும் உள்ள வேறுபாடுகளில்
தமிழ்ப் பாவனைக்கு முக்கியமானது என்னவெனில் scim-modules-table,
scim-tables-additional பொதிகள் பைஸ்டி உபுண்டு, குபுண்டு சி.டி களிலேயே உள்ளன
- எட்ஜியில் போல main server இலிருந்து பதிவிறக்க வேண்டியதில்லை. (எல்லா உபுண்டு
பதிவிறக்கத் தளங்களிலும், cd களில் என்னென்ன பொதிகள் உள்ளன என்பதைக் காட்டுவது manifest
கோப்புக்கள்- அவற்றில் பார்க்கலாம்).
பைஸ்டியிலும் முன்னைய வெளியீடுகளில் போல உள்ள ஒரு குறை default எழுத்துருவான
sans தமிழில் சரியாக உருப்பெறுவதில்லை என்பதே. தங்களது நிறுவல் குறிப்புகளிலும்
எழுத்துருக்களை sans இலிருந்து serif க்கு மாற்றச் சொல்ல வேண்டும் முதல் படியாக !
Debian-Etch, SuSe10.2, Fedora Core 6, Mandriva 2007 என்பவைகளில் sans
எழுத்துருக்கள் l10n செய்யப்பட்ட இடங்களில் சரியாகவே உருவடைகின்றன- ஆக இது உபுண்டுவில்
மட்டும் உள்ள வழுவாகிறது. நமது உபுண்டு தமிழ் குழுமம்தான் தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்க
வேண்டும்
~சேது
More information about the Ubuntu-l10n-tam
mailing list