debian-installer மொழிபெயர்ப்பு

மு.மயூரன் mmauran at gmail.com
Mon Sep 25 20:03:53 BST 2006


நண்பர்களுக்கு,

debian-installer இனை மொழிபெயர்க்கும்போது ஒரு வித்தியாசமான அணுகுமுறையை
கையாள்கிறேன்.
இடைமுகப்பில் வருகின்ற அறிவுறுத்தல்களையும் உதவிக்குறிப்புக்களையும் நேரடியாக
சொல்லுக்கு சொல் என்ற வகையில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்காமல் புதிதாக
உபுண்டுவை தம்ழில் நிறுவிக்கொள்ளவரும் பயனருக்கு எளிமையாகவும் விளக்கமாகவும்
இலகுவாகவும் இருக்கும்வகையில் அர்த்தம் மாறாமல் தமிழ்மயப்படுத்தி
மொழிபெயர்க்கிறேன்.

இவ்வாறு "தமிழ்மயப்படுத்துதல்" பயனரோடு இடைமுகப்பு கரடுமுரடாக பழகாமல் மிகுந்த
நட்போடு உரையாடும் என்று நம்புகிறேன்.

"தமிழ்மயப்படுத்துதலுக்கு" உங்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

தோழமையுடன்,

மு.மயூரன்

-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060926/d4444e41/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list