Re: debian-installer மொழிபெயர்ப்பு

மு.மயூரன் mmauran at gmail.com
Mon Sep 25 20:07:36 BST 2006


எடுத்துக்காட்டு:

உபுண்டுவை நிறுவிக்கொள்ள நீங்கள் தயார். அப்படித்தானே? சரி, இப்போது உங்களிடம்
சில கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு பதிலளித்தால் இந்த நிகழ்வட்டு (Live
CD) கொண்டிருக்கும் உள்ளடக்கங்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். அப்படி
நிறுவிக்கொண்டால், இறுவட்டு இல்லாமலே முழு வேகத்தோடு உபுண்டுவை உங்கள்
கணினியிலிருந்தே நீங்கள் இயக்கமுடியும்.

நிறுவல் செயற்பாட்டுக்கு எந்த மொழியில் அமையவேண்டும் என்பதை தெரிவு செய்க. இந்த
மொழியே நீங்கள் நிறுவப்போகும்இயங்குதளத்தின் இயல்பிருப்பு மொழியாக அமையும்.

நீங்க எங்கே இருக்கிறீங்க?

இந்த கணினிக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்?

பின்வரும் வன்தட்டுக்களில் ஒன்றில் உபுண்டுவை நிறுவுவதற்கு தேவையான இடத்தையும்
அமைப்புக்களையும் தானாகவே உருவாக்க இந்த நிறுவியை பணிக்கலாம். மாற்றாக,
நீங்களாகவே கைமுறையாக உங்கள் வன்தட்டை வகிர்வுகளை உருவாக்கலாம்.

இந்த நிறுவலுக்கு எந்தெந்த வகிர்வுகளை பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதையும்,
அவற்றை எங்கெங்கே ஏற்றுகை (mount) செய்யப்போகிறீர்கள் என்பதையும் தெரிவுசெய்க.

நீங்கள் கட்டாயம் ஒரு வகிர்வினை root ("/") கோப்பமைப்பில்  ஏற்றுகை
செய்யவேண்டும்.  அத்தோடு  ஆகக்குறைந்தது ஒரு வகிர்வையாவது swap ஆக
பயன்படுத்துவதற்கென ஒதுக்கவேண்டும்.

On 9/26/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> நண்பர்களுக்கு,
>
> debian-installer இனை மொழிபெயர்க்கும்போது ஒரு வித்தியாசமான அணுகுமுறையை
> கையாள்கிறேன்.
> இடைமுகப்பில் வருகின்ற அறிவுறுத்தல்களையும் உதவிக்குறிப்புக்களையும் நேரடியாக
> சொல்லுக்கு சொல் என்ற வகையில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்காமல் புதிதாக
> உபுண்டுவை தம்ழில் நிறுவிக்கொள்ளவரும் பயனருக்கு எளிமையாகவும் விளக்கமாகவும்
> இலகுவாகவும் இருக்கும்வகையில் அர்த்தம் மாறாமல் தமிழ்மயப்படுத்தி
> மொழிபெயர்க்கிறேன்.
>
> இவ்வாறு "தமிழ்மயப்படுத்துதல்" பயனரோடு இடைமுகப்பு கரடுமுரடாக பழகாமல்
> மிகுந்த நட்போடு உரையாடும் என்று நம்புகிறேன்.
>
> "தமிழ்மயப்படுத்துதலுக்கு" உங்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
>
> தோழமையுடன்,
>
> மு.மயூரன்
>
> --
> visit my blog
> http://www.mauran.blogspot.com




-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060926/71221aac/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list