[Ubuntu_Tamil] எ-கலப்பை தமிழ்நெட் 99 - உபுண்டு தமிழ்நெட் 99 வேறுபாடுகள்

மு.மயூரன் mmauran at gmail.com
Tue Oct 3 07:52:18 BST 2006


ரவி,

அடித்தத்தை திருத்தமுடியாத பிரச்சனை தமிழ்கீ யில் முன்பு வின்டோசிலும்
இருந்தது. அடுத்தத்டுத்த பதிப்புக்களில் திருத்தினார்கள். லினக்சில் அது சோதனை
செய்யப்பட்டு திருத்தப்படவில்லை. தமிழா குழுவினருக்கு தெரியப்படுத்தவேண்டும்.

நான் உங்களுக்கு சொன்ன gtk im வசதி gtk அடிப்படையை கொண்டு உருவாக்கப்பட்ட
மென்பொருட்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றையவற்றுக்கு  export செய்ய
முடியும். ஆனால் சரியாக வேலை செய்யாது. ஆகவே ஒப்பன் ஆபீஸ், firefox
போன்றவற்றிலெல்லாம் பயன்படுத்த நாம் scim இனையே வந்தடைய வேண்டியிருக்கும்.
நீங்கள் சொல்வதன்படி பார்த்தால் தானாக குற்று போடும் வசதியை gtk im
தவறவிட்டிருக்கிறது போல் தெரிகிறது.

நீங்கள் பழகி வைத்திருக்கும் விசைப்பலகை வடிவத்தையே நீங்கள் லினக்சில்
பயன்படுத்தவேண்டும். லினக்சுக்காக நீங்கள் வேறு விசைப்பலகைகள் பழகிக்கொள்ள
தேவையில்லை. அது அடிப்படைக்கொள்கைகளுக்கே முரணாக இருக்கும்.

நாங்கள் scim இனையே தீர்வாக கொள்வோம்.

1. scim இற்கான தமிழ் 99 வடிவத்தை கண்டுபிடிக்கவேண்டும் (இருந்தால்) சேது
சொன்னபடி தேடிப்பார்த்தேன். உபுண்டு repositories இல் contrib பொதி இல்லை. அதனை
சேது எமக்கு அனுப்பிவைத்தால் நல்லது.

2. அது எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிறதா என சோதித்து அறியவேண்டும்.

3. வசதிகள் போதாமலிருக்கும் பட்சத்தில் அவ் உள்ளீட்டு முறையை திருத்தம் செய்து
மேம்படுத்தவேண்டும்.

விரைவில் இதற்கு தீர்வு கிடைத்துவிடும். நாமே அதனை செய்துகொள்ளலாம்.


ஈகாரப்பிரச்சனை,,

ரவி, இந்த பிரச்சனை உபுண்டுவில் இயல்பிருப்பாய் பயன்படுத்தப்படும் serif
எழுத்துருவால் வருவது. அந்த எழுத்துருவின் ஈகாரம் உடைந்தே உள்ளது. இது
எழுத்துருப்பிரச்சனை. இந்த குறிப்பிட்ட எழுத்துரு வின்டோசின் arialunicodems
போன்றது. ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளுக்கும் ஒரே எழுத்துரு.  இதனை
மாற்றி வைத்துவிட்டால் ஈகாரம் உடையாது.

வழக்கம் போல தமிழ் தெரிவில் எழுத்துருக்களை மாற்றுவதன்மூலம் இதனை
செய்யமுடியாது. ஏனெனில் இது இயல்பிருப்பில் ஆங்கில எழுத்துரு. எனவே firefox இல்
western எழுத்துருக்களை தெரிவுசெய்து, அதில் tscu_paranar, sooriyan.com போன்ற
ஏதாவதொரு எழுத்துருவினை தெரிவுசெய்துவைத்துக்கொள்ளுங்கள். ஈகார பிரச்சனை
தீர்ந்துவிடும். எல்லா தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களையும் ஆங்கிலத்துக்கும்
பயன்படுத்தலாம். எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதனை நான் செய்துபார்த்து சரிவந்த
பின்னரே உங்களுக்கு சொல்லியிருந்தேன். (screenshots அனுப்பியதாய் நினைவு)


-மு.மயூரன்


On 10/3/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> sri. ravi,
> this group is very young and still finding its feet.
> the web site is in preparation right now.
> sri. ramadoss is working at it.
> sri.setu is working on wiki for kbd
> as you say wiki on several topics will be very helpful.
> please can you make a list of what you would like to see in those pages in
> order of priority?
> it will be helpful to those who prepare them.
> tv
> On 10/3/06, Ravi shankar <ravidreams_03 at yahoo.com> wrote:
> >
> > என் ஐயங்களுக்கு மறுமொழி தந்த அனைவருக்கும் நன்றிகள்.
> >
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061003/4ebb2bdb/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list