[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு நிறுவி

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Wed Nov 29 08:13:04 GMT 2006


சோம்பல் காரணமாக தள்ளிப்போட்டுவந்த பணி ஒன்றை இன்றைக்கு செய்துமுடித்தேன்.

இம்மடலோடு இணைக்கப்பட்டுள்ள கோப்பினை அவிழ்த்து நிறுவியினை செயற்படுத்தினால்
உபுண்டுவிற்கு தேவையான சகல தமிழ் வசதிகளும் உங்கள் கணினியில்
நிறுவப்பட்டுவிடும். இணைய இணைப்பு தேவையில்லை.

இது குபுண்டுவிற்கு என்னால் பரிந்துரைக்கப்படவில்லை. உபுண்டுவிற்கு மாத்திரமே.

கே டீ ஈ செயலிகளில் (qt) scim பயன்படுத்துவதற்கு தேவையான பொதி
சேர்க்கப்படவில்லை. அது சில மென்பொருட்களின் இயக்கத்தை பாதிப்பதுதான் காரணம்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள bamini.ttf எழுத்துரு கட்டற்ற மென்பொருள் அல்ல. ஆனால்
இதற்கான காப்புரிமையை எவரும் உரிமை கோருவதாக தெரியவில்லை. ஏறத்தாழ public
domain இற்கு வந்துவிட்ட மென்பொருள் அது.

ராமதாச் இக்கோப்பினை உபுண்டு தமிழ் தளத்தில் தரவேற்றி வைத்துக்கொண்டீர்களானால்,
பயனர்கள் தரவிறக்கி பயன்படுத்த வசதியாயிருக்கும். பதிவேற்றியவுடன் கோப்பின்
முகவரியை அறியத்தரவும்.

தோழமையுடன்

மு.மயூரன்


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061129/e8a437d6/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: tabuntu_6.10_1_i386.tar.gz
Type: application/x-gzip
Size: 3870627 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061129/e8a437d6/attachment-0001.bin 


More information about the Ubuntu-l10n-tam mailing list