[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Nov 8 02:23:31 GMT 2006


தொடர்ச்சிக்கு வழி காண வேண்டும்:

முன்னரே  சொன்னது போல் முதல் முறை  மொழிபெயர்ப்பதோடு வேலை  முடிவதில்லை.
தொடர்ச்சியில் தான் வெற்றியுள்ளது. புதிய வெளியீடுகள் வரும் போது நாமும் அதனை
தமிழில் மொழிபெயர்த்திருக்க வேண்டும்.

உபுண்டுவை நிறுவிய பின்னர் மேசைத்தளத்தில் நமக்கு மூன்று விஷயங்கள் கண்ணுக்கு
கிட்டுகின்றன. மற்றவை விருப்பத்தின் பெயரில் நாமே நிறுவிக் கொள்வது.

1. Applications 2. Places 3. System

இவற்றினுள் ஒன்றை நிர்வகிக்கும் பொறுப்பை நமக்குள் இருக்கும் உட்குழு
பொறுப்ப்பேற்க வேண்டும். உ.ம்: Applications ---> Internet க்கு கீழ் வரும்
செயலிகள் எல்லாம் ஒருவரின்/ ஒரு உட்குழுவின் கட்டுப்பாட்டிலிருக்கும். இக்குழு
புதிய  வெளியீடுகள் வரும்போது, இச்செயலிகளெல்லாம் முடிக்கப்பட்டுள்ளன என உறுதி
செய்ய வேண்டும். இக் குழு Applications ---> Internet செயலிகளை
மொழிபெயர்க்கும் அதே வேலையில் மற்றொரு குழு செய்யும் மொழிப் பெயர்ப்பை
மேற்பார்வையிடும்.

இது போல் ஒவ்வொரு குழுவும் ஒருகுறிப்பிட்ட செயலிகளை மொழிப்பெயர்த்து
பாதுகாப்பதுடன் மற்றொரு குழு செய்யும் பணிகளை  மேற்பார்வையிடுவது தரமான
மொழிபெயர்ப்புக்கு வழிவகுக்கும்.

ஒரு குழுவின் பிரதான கவனமெல்லாம் இங்ஙனம் ஏற்றுக்கொள்ளப் பட்ட செயலிகளின்பால்
மட்டுமே  இருத்தல் நல்லது. இது கவனச் சிதறலைத் தவிர்க்கும்.

தற்போதைய பிரிவுகள் "செயலிகள்" பட்டியில் மட்டும்,

1) Accessories
2) Games
3) Graphics
4) Internet
5) Office
6) Sound and Video

இந்த ஆறு வகைக்கும் நமக்குள்ளே  ஆறு குழுக்கள் இருத்தல் நல்லது. இன்றைய
தேதியில் இது ஒவ்வாமலிருக்கலாம். தொலை  நோக்கில் இது நன்மைப் புரியும்.
பதில்கள் வரவேற்கப் படுகின்றன.

>let us list the default applications that are yet to be translated.
>i guess that is most of multimedia baring rthymbox, oo and the graphic
tools

Shall we focus on application that come default on installation?

On 11/8/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
>
>
> a practical suggestion:
> let us list the default applications that are yet to be translated.
> i guess that is most of multimedia baring rthymbox, oo and the graphic
> tools
>
> try to find if anyone is working on it.
> if that info is not avble translate it taking the risk.
> if we can contact that person offer to translate it.
> we can upload the file in both sites.
> that way we can make sure it is unlikely to change.
> they will also be happy with some help
> tv
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Founder - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061108/ccc08fc6/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list