[உபுண்டு_தமிழ்]Improving this mail-list: Users post & discuss problems/bugs, solutions and suggestions

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Tue Nov 7 08:56:02 GMT 2006


சேது,

இநத் குழு சில மட்டுப்பாடுகளை உடையது.
l10n இற்கான குழுமமாக இருப்பதோடு உபுண்டு வழங்கலுக்கு மட்டும் என்ற எல்லையையும்
கொண்டது.
பொதுவான தொழிநுட்ப விஷயங்களை அலச எங்களுக்கு இன்னொரு குழு தேவைப்படுகிறது.
தமிழ்லினிக்ஸ் இருக்கிறது.
இங்கே நாம் அவை பற்றி பேசும்போது பிரச்சனைகளும் தீர்வுகளும் உபுண்டு பயனர்,
உபுண்டு மொழிபெயர்ப்பாளர் என்ற சிறிய வட்டத்தினுள் மட்டுமே இருக்கும். அது
தமிழ் க்னூ/லினக்ஸ் இன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

rosetta பற்றிய என் ஏமாற்றங்களை தொடர்ந்து இந்த குழுவின் இலட்சியப்புள்ளி எது
என்பதை தீர்மானிப்பதில் எனக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன.

பல்வேறு தீவிர எதிர்ப்புக்களை நான் வெளிப்படுத்தியிருந்தபோதும் ராமதாசின்
முனைப்பும் உழைப்பும் பாராட்டுக்குரியது. அவர்கள் தமக்கான இயங்குபுள்ளியை மிக
சிறிதாக தெளிவாக வரையறுத்துக்கொண்டு இயங்க முனைகிறார்கள் என்று நினைக்கிறேன்.
உபுண்டுவை தமிழில் மொழிபெயர்ப்பது என்ற தெளிவான நோக்கத்தோடு இந்த குழுவை
அமைத்திருக்கிறார்கள்.

தொழிநுட்ப விஷயங்களை பொறுத்தவரை தமிழ் சூழல் மிக சுருங்கியதாக இருப்பதால் அதனை
இங்கே செய்யாமல் பொதுவான குழுக்களில் செய்வது பயன்தரும்.
டெபியனை விரும்பாத நிறைய பிரயோசனமான தொழிநுட்பவியலாளர்கள் இருப்பார்கள்.
அத்தோடு அண்மையில் Gnew session என்ற வழங்கலுக்கு FSF நேரடி அனுசரணை வழங்கும்
செய்தியை கேள்விப்பட்டவுடன் உபுண்டுவின் நிலையாமை புரிந்தது.

அத்தோடு puppy linux தொடர்பான என் தேடல்களை, பிரச்சனைகளை இங்கே பகிர்ந்துகொள்ள
முடியாது. அவற்றை பொதுவான தளத்தில் விவாதித்தால் எல்லோருக்கும் பயன்தரும்.

இந்த உபுண்டு தமிழ் மொழிபெயர்ப்புக்குழுவில் இக்குழுவின் நோக்கங்களுக்குள்
நின்று கொண்டு தெளிவான அதன் மொழிபெயர்ப்பு இலட்சியத்துக்கு துணை செய்வது
குழுவினருக்கு மிகவும் பயன்தரும்.

ஏற்கனவே திவா, ராமதாஸ் போன்றவர்கள் எடுத்துக்காட்டியது போல, இந்த குழுவில்
மஉபுண்டு மொழியாக்க வேலைகளுக்கான உரையாடல்களை மட்டும் தொடர்வது நல்லது என்பது
என் கருத்து.



-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061107/5f9c28bb/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list