வணக்கம்,

நான் சமீபத்தில் தான் உபுண்டு லினக்ஸிற்கு  மாறினேன். மிகவும்  உபயோகமாகவும்,  விரும்பதக்கதாகவும்  இருக்கிறது.  நான்  மொழிபெயர்ப்பு பணியில்  ஈடுபட்டிருப்பதால்,  தேவைக்கேற்ப பல்வேறு  என்கோடிங்கில்  தட்டெழுத்திட்டு தர வேண்டிய  நிலை இருக்கிறது.

விண்டோசில் நான் என்எச்எம் (NHM) எழுதியை உபயோகித்து வந்தேன்.
அதில் தாம், ஸ்ரீலிபி,
யூனிகோட் போன்ற என்கோடிங்
முறையை தமிழ்99 முறையில்
தட்டெழுத்திட்டு அளிக்க முடிந்தது.

ஆனால் இப்போது உபுண்டு 9.10 -ல்
என்னால் யூனிகோட்டைத் தவிர
வேறெதையும் தட்டெழுத்திட
முடியவில்லை. தற்போது ibus

பயன்படுத்தி வருகிறேன்.

உபுண்டுவில் தாம், ஸ்ரீலிபி
போன்ற என்கோடிங் முறையைத்
தட்டெழுத்திட வசதி
இருக்கிறதா? அப்படி
இருக்கிறது என்றால் நான்

என்ன செய்ய வேண்டும் என்று
தெரிவிப்பீர்களேயானால்,
விரைவிலேயே விண்டோசை தூக்கி போட வசதியாக இருக்கும்.

உதவியை

எதிர்பார்த்திருக்கும்...

விஜே