அனைவருக்கும் வணக்கம்,

கடந்த ஞாயிறு 09-03-2009 மாலை - உபுண்டு ஜஆர்சி பயனர் கூட்டத்தின் சுருக்க உரை:

கலந்து கொண்டவர்கள்: பத்மநாதன், தங்கமணி அருண், குமரன் (ஜெயா  பொறியல் கல்லூரி)

கூட்டம் சுமார் மாலை 4 மணியளவில் தொடங்கியது, பத்மநாதன் தனது உரையை ஆரம்பித்தார், மதுரை தியாகராஜா கல்லூரில் நடைப்பெற்ற கட்டற்ற மென்பொருள் மநாட்டில் தனது அனுபவங்களையும், உபுண்டுவின் பங்களிப்ப பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

இதில் மதுரை டிவிஎஸ் பள்ளி குழந்தைகள் சிறப்பாக உபுண்டுவில்  டெமா  காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் என்பதை சொன்னவுடன் ஆச்சரியமாக இருந்தது...இதில்  தியாகராஜா கல்லூரி மாணவர்கள் நல்ல பங்களிப்பை அளித்துள்ளனர்  என்பது தெறியவந்தது.

அனைவருக்கும் தமிழ்  குழுமத்தின் சார்பாக மனமரார்ந்த பாராட்டுக்கள் !!! ஆனாலும் இன்னமும் தென் மாவட்டங்களில் கட்டற்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாக தெரிகிறது. இது எப்படி கழையப்படும் ???

ஜெயா கல்லூரி குமரனும் தனது அனுபவத்தையும், தன் கல்லூரியின் பங்களிப்பு பற்றியும் விளக்கினார். பின் குமரன் தானாக முன்வந்து பயன்பாடுகள் எதாவது செய்து தரவா என கேட்டார், அதற்கு பத்மநாதன் தனது மின்சார துறைக்கு ஏகப்பட்ட பயன்பாடுகள் இணையத்தை மையமாக வைத்து எழுதப்பட வேண்டும் என்பதை முன்வைத்தார்,
இதற்கு குமரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரம் நீடித்து 6 மணியளவில் முடிவடைந்தது.

நிகழ்ச்சி முடிந்தபின் திரு. பாலாஜி என்பவர் என்னை அழைத்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியவில்லை என வருத்தப்பட்டார்.

அன்புடன்
அருண்

http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam

http://lists.ubuntu.com/ubuntu-tam