வணக்கம்,

திருச்சிக்கும் கரூருக்கும் இடையே இருக்கும் கிராமமாகும் மகாதனபுரம். அவ்விடத்தில் உள்ள எம் வி முத்துகிருஷ்ண ஐயர் ஐடிஐ தனில் கடந்த சனக்கிழமையன்று (03.01.2009) கட்டற்றமென்பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை வரும் செப்டம்பர் மாதம் வர இருக்கின்ற மென்விடுதலை நாள் நிகழ்ச்சியின் முன்னோடியாக நடத்தியுள்ளனர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்.

நிகழச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கு குனு லினக்ஸ் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் பொருட்டு தமிழில் சிறியதொரு கையேட்டினையும் ஒருங்கிணைப்பாளர்கள் வடிவமைத்திருந்தனர்.

மகாதானபுரத்திற்கு அடுத்து கிடைக்கப்பெற வேண்டிய பெரிய தானமாக, பிராட் பேண்ட் இணைய வசதியை செய்து தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவரும் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கரூரில் இதனையொத்த நிகழச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விளக்கங்களுக்கு உபுண்டு இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டது.

அன்றைய தினம் மகாதானபுரத்திற்கு சென்று ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடிவிட்டு வந்திருந்தோம். தொடர்ந்து பல செயல்கள் மேற்கொள்ளவிருப்பதாக ஐடிஐயின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.  அதிக மகசூலை கொடுத்துவிட்டு மலட்டு விதைகளுக்கு வித்திடும் குணம் மாற்றப்பட்ட மேலை நாட்டு விதைகளுக்கு கட்டுப்படமாட்டோம் என நாங்கள் சொல்வதைப் போலவே கட்டற்ற மென்பொருளும் இருப்பதாக ஐடிஐயினை அது தொடங்கிய காலம் முதல் நடத்தி வரும் திரு. இராஜாராமன் அவர்கள் தெரிவித்தார்கள்.

நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய ஐடிஐ பொறுப்பாளர்களுள் ஒருவரான இராம்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஆமாச்சு