---------- Forwarded message ----------
Date: 2008/10/31
நிகழ்வட்டுகள்
பகிர்ந்தளிப்பில் கிடைத்த
அனுபவத்தை பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன்.
ஊட்டியில்
நிகழ்ந்த நடைமுறை பயிற்சி
முகாமின் பயனாக கண்ணன் என்பவர்
தனது கணினி பயிற்சி மையத்தில்
மூன்று  கணினியில் உபுன்டு-வை
நிறுவினார். பிறகு
கூடுதல் பொதிகள்  நிறுவ
முயன்றார். இனைய
இனைப்பு இல்லாத காரணத்தால்
நறுவுதல் கடினமாயிற்று.
பிறகு பொதிகளை
குறுவட்டில் பதிவு செய்து
கொடுத்தேன். அதனை
நிறுவினார். 'Nvidya card' க்கு
தேவையான மூல பொதியை  நிறுவ
முயன்றார். அது
முடியாமல் இரு கணினியில்
விண்டோஸ் நிறுவினார்.
பொள்ளாச்சியில்
ஒரு நண்பருக்கு ( கணினி
தொழில் புரிபவர்) நிகழ்வட்டை
அளித்தேன். அவர்
பலருக்கு நிறுவி கொடுத்தார்.
லினக்ஸை கையாள்வது
சற்று சிரமமாக இருக்கிறது
மேலும் பயனர் இதை பயன்படுத்த
முன்வர தயங்குகின்றனர் என
கூறினார். வீட்டு
உபயோகிப்பாளர்கள் வைரஸ்
பிடியிலிருந்து விடுபட்டு
சந்தோசம் அடைந்தனர் எனவும்
கூறினார்.
மற்றொரு
நண்பர் ( தட்டச்சு
தொழில் புரிபவர்), தனது
கணினி ஒன்றில்  உபுன்டு
நிறுவினார். உபயோகிக்க
நன்றாக இருந்தாலும் விண்டோஸிலிருந்து
வெளிவர தயங்குகிறார். மற்ற
கணினிகளில்  நிறுவ தயங்குகிறார்.
எனது
அண்டை வீட்டார் ஒருவர்,
நூற்பாலை ஒன்றில்
கணினி பிரிவில் மேலாளராக
பணிபுரிகிறார். அங்கு
தனிதுவமான பொதி ஒன்றை
உபயோகப்படுத்துகிறார்கள்.
ஏறத்தாழ முப்பதுக்கும்
மேற்பட்ட  கணினிகள் உள்ளன.
இவற்றில் பாதி
மட்டுமே தனிதுவமான பொதியை
பயன்படுத்துகிறார்கள்.
மற்றவை அலுவலக
பயன்பாட்டிற்கும்,
மின்னஞ்சலுக்கும்
பயன்படுத்துகிறார்கள்.
இவற்றில் இரு
கணினிகளுக்கு உபுன்டு-வை
நிறுவிக்கொடுத்தேன்.
உபயோகிக்க நன்றாக
இருக்கிறது என கூறினார்.
மற்றொரு
நண்பர் வீட்டு உபயோகத்திற்காக
உபுன்டு நிறுவித்தறுமாறு
வேண்டினார். இரட்டை
இயக்கஅமைவாக விண்டோஸ் உடன்
உபுன்டு-வை
நிறுவிக்கொடுத்தேன். சில
நாட்களுக்கு பிறகு அவரை
சந்தித்த பொழுது ஆடியோ மற்றும்
வீடியோவை இசைக்க முடியவில்லை
என கூறினார். மேலும்
கேம்ஸ் எதுவும் நிறுவி இயக்க
முடியவில்லை என்றார்.
தற்போது விண்டோஸை
உபயோகப்படுத்துகிறார்.
இனி
வரும் காலங்களில் உபுன்டு
நிகழ்வட்டுகள்  பகிர்ந்தளிப்புடன்
கூடுதல் பொதிகள் குறுவட்டையும்
கொடுத்தல் அவசியமாகிறது.
மேலும் அமாச்சு
கூறியதுபோல், ஒரு
உபுன்டு துவக்க கையேடு தமிழில்
கட்டாயம் தேவைபடுகிறது.
இது தவிர ஆங்காங்கே
உபுன்டு அறிமுகப்பயிற்சியும்
நிகழ்த்தி மக்களிடையே
விழிப்புணர்வை கொண்டுவர
வேண்டும்.
இப்படிக்கு
ந.
பத்மநாதன்.
உதகை.