வணக்கம்

இளவேனிற் காலத்தின் இரண்டாவது இதழை உங்கள் முன் படைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். புத்தாண்டில் இம்முயற்சியை துவங்கிய எங்கரங்களுக்கு வலு ஊட்டும் விதமாக அமைந்த வாசகர்களின் கருத்துக்களுடன் இம்மாத இதழ் துவங்குகிறது.

யுனிகோடில் கோட்டை விட்டவற்றையும் ஆக வேண்டியதற்கான தமது பரிந்துரைகளையும் நயம்பட நமக்கு, தமக்கே உரிய தனித்தன்மையுடன் எடுத்துரைக்கும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. இரமண்ராஜ் அவர்களின் நீதிக்கு நீதி கட்டுரையுடன் தொடர்கிறது.

நிறுவலிலேயே நின்றுவிடும் பலரது குனு லினக்ஸ் ஆவலுக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக அமைந்துள்ள உபி (Wubi) மென்பொருள் கொண்டு விண்டோஸுக்குள்ளிருந்தே உபுண்டு இயங்கு தளத்தினை நிறுவும் முறையை வண்ணத் திரைக்காட்சிகளுடன் இலாவகமாக எடுத்துரைத்திருக்கிறார் அப்துல் ஹலீம். இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் மாணவர் இவர்.

நிரலாக்கப் பழகும் போதே அந்நிரல் பன்மொழித்தன்மை வாய்ந்ததாக இருப்பதற்கான எளிய அறிமுகத்தை தரும் பாரதியின் கெட்டெக்ஸ்ட் அறிமுகம், தங்கமணி அருணின் ரெட்ஹாட் பொதி மேலாண்மைத் தொடர்ச்சி, எமது யுனிக்ஸ் ஆயத்தம் ஆகியன தொடர்ந்து தம்மை வாசிக்கும் படி உங்களிடம் விண்ணப்பித்து அணிவகுத்துள்ளன.

இந்திய சந்தைகளை தட்டும் நியோ பிரி ரன்னர் பற்றிய முக்கியமாக செய்தியை கொண்டுள்ள அக்கம் பக்கத்தை படிக்க மறவாதீர். காரணத்துடன் பிடிஎப் கோப்பு தாமதப்படுத்தப் பட்டுள்ளது. இணையத்தில் அனைவரும் வாசித்த இரண்டொரு நாட்களில் கிடைக்கப்பெறும்.

தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இம்மாத இதழ் பற்றிய தங்களது மேலான கருத்துக்களை மறவாது மடலனுப்பவும். தங்களுடைய கட்டுரைகளையும் இவ்விதழுக்கு அணிகலனாய் அடுத்த மாதம் எதிர்பார்க்கிறோம்.

பார்க்க படிக்க சொடுக்குக : http://kanimozhi.org.in

-- ஆமாச்சு