உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில், சென்னையை சுற்றி இருக்கும் குனு லினக்ஸ் ஆர்வலராகவும், உபுண்டு வட்டுக்களை பிறர் கோரும் போது அதனை தர விழைவோராகவும் இருப்போரை இனங்கண்டு, அவர்களிடத்தே வட்டுக்கள் சிலவற்றை ஒப்படைத்து விநியோகிக்கும் முறையை துவக்க உத்தேசம்.

தீர தீர இவை கிடைக்கும் படி செய்யும் பொறுப்பை உபுண்டு தமிழ் குழுமம் ஏற்கும். இதற்கு உபுண்டு கைப்பிடி தோழர்கள் திட்டம் என்று பெயர்.

தங்களுக்கு இத்தகைய கைப்பிடி தோழராகும் விருப்பம் இருப்பின் தெரியப் படுத்தவும். காலஞ் செல்ல செல்ல இதனை தமிழகம் நெடுகிலும் விஸ்தரிக்க ஆவல். தாங்கள் சென்னைக்கு புறத்தே இருந்து இப்போதே இதற்கு ஆர்வம் கொண்டிருப்பின் அவசியம் அறியத் தரவும். அதனை செயற்படுத்துதற்கான நடைமுறைகளை உடனே ஆராய்ந்து மேற்கொள்ளலாம்.

ஆமாச்சு