வணக்கம்,

இன்றைய தினம் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். கட்டற்ற கணிநுட்பத்தை ஒரு இணைய இதழின் மூலமாக உங்கள் அனைவரின் முன் படைக்கத் துவங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

கணிமொழியின் முதல் இதழ் ஆறு கட்டுரைகள் கொண்டதாக உங்கள் பார்வையில் தவழ்கிறது. முதல் மாத இதழான இதில் கணிமொழி அறிமுகம்(1), கணிச்சொற் விளக்கம்(2), திறந்த ஆவண வடிவை ஆதரிப்போம்(3), ரெட் ஹாட் பொதி மேலாண்மை (4), அக்கம் பக்கம்(5), எம்பி3 கோப்புகள் இசைக்க(6) எனும் ஆறு தலைப்பில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இதனை உருவாக்க ஊக்கமும் ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் மேலான ஆதரவுடன் இது மென்மேலும் வளரும் என திடமாக நம்புகிறோம்.

கணிமொழியின் முதலிதழை வாசிக்க: http://kanimozhi.org.in

முதலிதழில்...

(1) கணிமொழி அறிமுகம்

கணிநுட்பத்தின் பயன்பாடும் தேவையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மென்பொருட்துறையின் தாக்கம் உலகம் உணர்ந்த ஒன்று. இன்றைய சூழலில் மென்பொருட்களை மேலோட்டமாக இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம். முதலாவது பயனர்களாகிய நம் ஒவ்வொருவரின் சுதந்தரத்திற்கும் மதிப்பளிக்கும் கட்டற்ற மென்பொருள்.

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html

(2) கணிச்சொற் விளக்கம்

நிரல் - குறிப்பிட்ட பணியினை செய்திடும் பொருட்டு கணினிக்கு இடப்பட வேண்டிய ஏவற்களின் தொகுப்பை நிரல் என்கிறோம். இதனை செய்நிரல் எனவும் வழங்குவர். நிரல் எழுதுவதை தொழிலாக கொண்டவர் நிரலாளர் ஆவார். இங்ஙனம் நிரலாக்குதற்கு பல்வேறு நிரலாக்க மொழிகள் துணை புரிகின்றன. சி, சி++, பைதான், ஜாவா, பேர்ல், ரூபி, பிஎச்பி இவற்றுள் குறிப்பிடத் தக்கவை

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/kanichor-vilakkam.html

(3) திறந்த ஆவண வடிவை ஆதரிப்போம்

உரையாக்கம், அளிக்கைகள், விரிதாட்கள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலுவலகப் பயன்பாடுகளுக்கான ஒரு வடிவமென திறந்த ஆவண வடிவத்தைக் கொள்ளலாம். ஓபன்ஆபீஸ், கேஆபீஸ், அபிவோர்டு முதலிய பயன்பாடுகள் இவ்வடிவத்தைப் பயன்படுத்துகின்றன.

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/thirandha-aavana-vadiva-adharavu.html

(4) ரெட்ஹாட் பொதி மேலாண்மை

காலங்கள் செல்ல செல்ல ரெட் ஹாட் லினக்ஸ் மிகவும் பிரபலமடைந்துவிட்டது, இரண்டே வருடங்களில் சிலாக்வேர்(இதற்கு முன் பிரபலமடைந்த) லினக்ஸை முந்திவிட்டது. இந்த வெற்றிக்கு கண்டிப்பாக சில காரணங்கள் இருக்க வேண்டும், அதற்கு மிக முக்கியமான காரணம் ஆர்பிஎம் (ரெட் ஹாட் பொதி மேலாளர்) ஆகும்..

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/rpm-arimugam.html

(5) அக்கம் பக்கம்

லினக்ஸ் என்றாலே பலரது நினைவுக்கு வருவது இன்றும் ரெட்ஹாட்தான். குனு லின்க்ஸை வணிக ரீதியாகவும் வெற்றிபெறச் செய்ததில் ரெட்ஹாட்டின் பங்கு மிகப்பெரியது.

அத்தகைய ரெட்ஹாட்டால் ஊக்கமளிக்கப்பட்டு சமூகம் சார்ந்த முறையில் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கும் பிரபலமான குனு லினக்ஸ் இயங்கு தளம் பெடோரா ஆகும்.

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/akkam-pakkam.html

(6) எம்பி3 கோப்புகள் இசைக்க

எம்பி3 படைப்புரிமங்களால் கவரப்பெற்ற கட்டுப்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாகும். சில நாடுகளில் அதனை பயன்படுத்த சட்டம் அனுமதிக்கலாம். சில நாடுகளில் அனுமதி இல்லாது போகலாம். ஆகையால் குனு லினக்ஸ் இயங்கு தள தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இதற்கான ஆதரவு பெரும்பாலும் இயல்பிருப்பாக கிடைக்காது.

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/mp3-koppugal.html

-- ஆமாச்சு