நல்ல சேதி! நல்ல சேதி! இத்தனை நாளா நம்மைப் பிடித்திருக்கும்
அடிமை மோகச் சங்கிலியிலிருந்து விடுதலையடைய மகத்ததானதொரு வாய்ப்பு! என்ன?
எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கும் மென்பொருளை எட்டிப் பிடிக்க
விழைவோருக்கானது இது! தப்பென தெரிந்தும் காப்பியடிக்கும்
குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலையடைய ஒரு சந்தர்ப்பம்!

குட்டிக் குழந்தைகள், அன்புத் தோழர்கள் ஆற்றல் மிக்க தொழில்
முனைவோர் என அனைவருக்கும் அரியதொரு வாய்ப்பு! விடாப் பிடியாகப் பிடித்துக்
கொண்டிருக்கும் விண்டோஸை விரட்டி தைப் பிறந்தக் கையுடன் வழிக் காட்ட
நாங்கள் செய்திருக்கும் இவ் வேற்பாடு!

என்ன? கட்டற்ற மென்பொருள் மாநாடு

அப்டீன்னா? குனு/ லினக்ஸ் இயங்குதள ஆற்றல்களின் அணிவகுப்பு

எங்கே? எம் ஐ டி வளாகம், குரோம் பேட்டை, சென்னை

எப்போ? பிப்ரவரி 01, 02, 03

விசேஷம்? இது உங்களுக்கானது

விவரங்களுக்கு? http://fossconf.in

வேறென்ன? அடடே! வல வலன்னு பேசாம! வந்து தான் பாருங்களேன்!

அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!