ரிச்சர்ட் ஸ்டால்மேனின்,

அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!

மூலம்:
http://www.gnu.org/philosophy/not-ipr.xhtml

தனித்த மாறுபட்ட, முற்றிலும் வெவ்வேறு பொருட்களையும், சட்டங்களையும்
பிரதிபலிக்கின்ற பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரை ஆகிய மூன்று
விஷயங்களையும் ஒரே குட்டையில் போட்டு "அறிவுசார் சொத்து" என்று குழப்புவது
வாடிக்கையாகிவிட்டது. இது ஏதோ விபத்தில் விளைந்த விபரீதம் அல்ல. இதனால்
இலாபமடையும் நிறுவனங்கள் வளர்த்துவிட்ட குழப்பம். இந்த குழப்பத்தினை
தவிர்க்க இப்பதத்தை முற்றிலும் புறக்கணிப்பதே தெளிவான வழி.

"அறிவுசார் சொத்து" என்கிற இப்பதமானது 1967 ல் "உலக அறிவுசார்
சொத்துரிமைக் கழகம்" நிறுவப்பட்ட பின்னர், பின்பற்றப்படத் துவங்கி
சமீபத்தில் தான் மிகவும் பிரபலமானது என்கிறார் ஸ்டான்போஃர்டு சட்டப்
பள்ளியில் தற்பொழுது பேராசிரியராக இருக்கும் மார்க் லேமேய். (WIPO முன்னர்
ஐநா சபையின் அங்கமாய் இருந்தது. ஆனால் உண்மையில் பதிப்புரிமை, சுய உரிமை
மற்றும் வர்த்தக முத்திரை உடையோர்களுடைய விருப்பங்களைத் தான் அது
பிரதிபலித்தது.)

இப்பதத்திலுள்ள பாரபட்சத்தினை கண்டறிவது மிகச் சுலபம். இது பௌதீக
பொருட்களின் மீதுள்ள சொத்துரிமையைப் போல பதிப்புரிமை, சுயயுரிமை,
வர்த்தகமுத்திரை ஆகியவற்றைக் கருதச் சொல்கிறது. (அறிஞர்களுக்கு மட்டுமே
தெரியக்கூடிய பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரைகளுக்கான சட்ட
விளக்கங்களோடு இந்த ஒப்பீடானது முரண்படுகிறது.) உண்மையில் இச்சட்டங்கள்
பௌதீக சொத்துரிமைச் சட்டங்களைப் போலில்லை என்றபோதும் இப்பதத்தினை
அவ்வர்த்ததிலேயே பிரயயோகப்படுத்துகின்ற காரணத்தினால் சட்டமன்றத்தினர் இதனை
அங்ஙனமே மாற்ற முனைகின்றனர். பதிப்புரிமை, சுயயுரிமை மற்றும்
வர்த்தகமுத்திரைகளைப் கடைபிடிக்கின்ற நிறுவனங்கள் இம்மாற்றத்தினையே
விரும்புகிறார்கள் என்பதால் "அறிவுசார் சொத்து" என்பதின் பாரபட்சம் நன்கு
புலப்படும்.

தொடரும்...

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்

தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா