தொடர்ச்சி...

கட்டற்ற மென்பொருள் கொள்கையாள் உந்தப் படாத திறந்த மூல
ஆதரவாளரொருவர் "எங்களுடைய உருவாக்க முறையினை கடைபிடிக்காது நீங்கள்
இப்பொதியை திறம்பட செயல்பட வைத்த விதம் ஆச்சரியமளிக்கிறது. இதன்
பிரதியொன்றினை எப்படி நான் பெறுவது? " எனக் கேட்பார். இத்தகைய அணுகுமுறை
சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காத திட்டங்களை ஊக்குவிப்பதாய் அமைந்து தீமையை
விளைவிக்கும்.

கட்டற்ற மென்பொருளாதரவாளரோ "உங்கள் நிரல் வசீகரிக்கக்
கூடியதுதான். ஆனால் அதனைப் பயன்படுத்த எனது சுதந்திரத்தினை விலையாய்
தரமாட்டேன். இதற்கு மாற்றாக ஒரு கட்டற்ற மென்பொருள் உருவாக்கும்
திட்டத்திற்குப் பங்களிப்பேன்." எனப் பகர்வார். நமது சுதந்திரத்திற்கு
நாம் மதிப்பளித்தால் தான் அதனைப் பேணிக் காக்க நம்மால் செயல்படமுடியும்.

மென்பொருள் வலுவுடையதாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும்
இருக்கவேண்டும் என்கிற எண்ணம் பயனர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற
நினைப்பினால் வருகிறது. வலுவுடையதாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும்
இருக்கிற மென்பொருள் பயனர்களுக்குச் சேவை செய்ய வல்லது.

ஆனால் சுதந்திரத்திற்கு மதிப்பளித்தால் மட்டுமே மென்பொருளின்
பயனருக்கு சேவையளிக்க உதவுகிறது எனலாம். மென்பொருளின் வடிவமைப்பு பயனரின்
மீது கட்டுப்பாடுகளைப் போட்டால் என்ன செய்வது! கட்டறுக்க கடினம் என்பதே
நம்பகத்தன்மையின் அர்த்தமாகிப் போய்விடும்!

திரைப்பட மற்றும் ஒலிப்பதிவு நிறுவனங்களின் வற்புறுத்தல்களின்
பேரில், தனிநபர் உபயோகப்படுதுகின்ற மென்பொருள்கள் அவர்களைக் கட்டுப்
படுத்தும் நோக்கில் உருவாக்கப் படுகின்றன. இந்த மட்டமான வசதியை டி,ஆர்.எம்
என்கிறார்கள். டிஜிட்டல் உரிமை மறுப்பு நிர்வாகம் என்று கூறுவது சரியாக
இருக்குமோ? (பார்க்க: DefectiveByDesign.org) இது சுதந்திரத்தை
லட்சியமாய்க் கொண்டு கட்டற்ற மென்பொருள் வழங்கும் மாற்றுச் சூத்திரம். இது
ஏட்டளவில் என்றில்லை. ஏனெனில் டி.ஆர்.எம் ன் குறிக்கோள் உங்களுடைய
சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது. டி.ஆர்.எம் னை உருவாக்குபவர்கள்
டி.ஆர்.எம் னை செயல்படுத்துகின்ற மென்பொருட்களை ஒருவரால் மாற்றப்படுவதை
கடினமாிக, இயலாததாக ஆக்குவதோடு நில்லாமல் சட்டவிரோதமாக்கவும் முயற்சி
செய்கிறார்கள்.
தொடரும்...

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா